ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (03.08.2020) பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், 2 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருட்களான பாடநூல்கள், புத்தகப் பை, சீருடைகள், காலணிகள் ஆகியன வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியரின் சொந்த செலவில் முகக் கவசங்கள் மற்றும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்வு முறை அட்டைகள் ஆகியனவும் வழங்கப்பட்டது. முன்னதாக அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும், தடுப்பு முறைகளையும் தலைமை ஆசிரியர் விளக்கிக் கூறினார். மேலும் இக்காலத்தில் மாணவர்கள் கற்றல் தடைபடாமல் தொடர, தமிழக கல்வித்துறை ஒளிபரப்பும் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் காணுமாறும் பெற்றோர்கள் இதற்கு உரிய ஒத்துழைப்பு நல்கி மாணவர்களுக்கு வழிகாட்டுமாறும் கேட்டுக்கொண்டார். நிகழ்வில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திரு வே. இராஜ்குமார், திரு ஜி.எம். சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பெ. மகாலட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி கு. ஆனந்தி மற்றும் பெற்றோர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
புதன், 5 ஆகஸ்ட், 2020
புதன், 29 ஏப்ரல், 2020
கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கிய நிகழ்வு.....
இன்று (29.04.2020) காலை 10 மணி முதல் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர்
பள்ளியில் படிக்கும் அனைத்து (53 மாணவர்கள்) மாணவர்களின் இல்லங்களுக்கு
நேரில் சென்று கொரோனா நிவாரணப் பொருட்களை (ரூபாய் 600 மதிப்புள்ள மளிகை
மற்றும் சுகாதார பொருட்கள்) எமது பள்ளி ஆசிரியர்கள் சார்பில்
வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊத்தங்கரை வட்டாட்சியர் திரு. செந்தில்குமரன் அவர்கள் தாமாக
முன்வந்து ஆர்வத்தோடு கலந்துக் கொண்டார்.
நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள்
தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள்
தலைமையில் கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சி மன்றத் தலைவர் தி. வெங்கடேசன்,
பள்ளி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமார், ஜி.எம். சிவக்குமார்,
பூ.இராம்குமார், ஆனந்த கோபாலகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஜோதிநகர் பள்ளிக்கு
வரும் மாணவர்களின் வீடுகள் அமைந்துள்ள ஜோதிநகர், நாச்சகவுண்டனூர், காமராஜ்நகர், கெங்கிநாயகன்பட்டி, படதாசம்பட்டி ஆகிய குக்கிராமங்களுக்குச் சென்று
நேரில் பொருட்களை வழங்கினர். பொருட்களை பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் மிகுந்த
மனநிறைவையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)