வெள்ளி, 1 ஜூன், 2018

முதல் பருவ விலையில்லா பாடநூல்கள் வழங்கும் விழா – 2018-19


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 01.06.2018 மாணவர்களுக்கான முதல் பருவ விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது .
                 பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு  விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகளும் வழங்கப்பட்டது.
            அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர் புதிய பாடநூல்களில் புதிய தொழிற் நுட்பம் மூலம் அறிமுகப் செய்யப்பட்டுள்ள .Q.R கோடுகளை பயன்படுத்தி, மாதிரி பாடத்தை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நடத்திக் காட்டினார். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு புதிய பாடங்களை கவனித்தனர்.
     அப்போது அவர் இதே போன்று அனைத்து பாடங்களும் நடத்தப்படும் எனவும், மதிப்பீடும் இதே முறையில் அமையும்  எனவும் கூறி மாணவர்களை ஆர்வமூட்டினார்.
           விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு.லட்சுமி, த. லதா, ந. திலகா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்
































வியாழன், 31 மே, 2018

1,6,9,11 புதிய பாட புத்தகங்கள் இணையத்தில் வெளியீடு

பள்ளி ஆய்வின் போது CEO, DEO, BEO, EDC, SSA APO, BEO, BRC SUPERVISOR, BRTE, DI, DPEI, ECO ஆகிய கல்வித்துறை அதிகாரிகளின் பணிகள் என்ன? - செயல்முறைகள் (30.05.2018)

2018-19 TEACHERS COUNSELING GO -403 DATE-29.05.2018 PUBLISHED

NMMS Scholarship Amount increased from Rs.6000 to 12000 per annum effect from April 2017....


வெள்ளி, 25 மே, 2018

கல்வி தகவல்தொடர்பு தொழிற்நுட்பப் பயிற்சி....


இன்று 25.05.2018 ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான ஒருநாள் கல்வி தகவல் தொழிற்நுட்பப் (Information and communications technology) பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


முன்னதாக காலை 9.30 மணிக்கு ஜோதிநகர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் துவங்கிய பயிற்சியில் திரு வெ.. ஸ்ரீதர் அனைவரையும் வரவேற்றார். தலைமை உரையாற்றிய திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது உரையில் ஆசிரியர்கள், தற்போதைய புதிய தொழிற் நுட்பங்களுக்கு தம்மை மேம்படுத்திக் கொள்ளவும், வரும் கல்வி ஆண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் புதிய பாடபுத்தகங்களை எளிதில் கையாண்டு மாணவர்களின் திறனை மேம்படுத்திடவும் இப் பயிற்சி வழங்கப்படுவதாகவும், இதில் கற்றுக்கொள்ளும் புதிய கற்றல்/கற்பித்தல் அணுகுமுறைகள் மற்றும் செயலிகள் மூலம் வருங்கால மாணவச் சமுதாயம் சிறப்பு பெறும் எனவும் அதற்காக ஆசிரியர்கள் அனைவரும் புதிய தொழிற்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் கூறினார். ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு மு. விஜயராஜ், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி கோ. மாதேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதில் ஊத்தங்கரை ஒன்றிய ஆசிரியர்கள் இப்பயிற்சியை முழுமையாகப் பெற்று, மாவட்ட அளவில் நமது ஒன்றியம்  கல்வியில் சிறப்பிடம் பெற பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
பயிற்சியில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த தலைமை மற்றும் உதவி ஆசிரியர்கள் 35 பேர் தாமாக முன்வந்து சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கலந்துக்கொண்டனர். இதில் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் இருந்து வந்து இரு பெண் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்றுச் சென்றது பாராட்டுக்குறியதாகும்.
பயிற்சியில் திறன் பேசியை மடிக் கணினியோடு இணைத்தல், செயலிகள் மூலம் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் படங்கள் உருவாக்குதல், மதிப்பீட்டு வினாக்கள் தயாரித்தல், Q.R கோடு படித்தறிதல் மற்றும் தயாரித்தல், யூ டியூப் உருவாக்கம் மற்றும் படக்காட்சிகளை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பிற்பகல் 5 மணி வரையில் நடைபெற்ற பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் மிக்க ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

பயிற்சியை  ஆசிரியர்கள் திரு இரா. அருண்குமார், திரு வெ. ஸ்ரீதர், திரு சீனிவாசன் ஆகியோர் சிறப்பாக வழங்கினர்.