ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா.......






ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டு குறு வளமையம் சார்பில் இன்று (08.04.2018)  பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
மைய ஒருங்கிணைப்பாளரும் ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியருமான திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாத உதவி ஆசிரியர் திருமதி சுகுணா அனைவரையும் வரவேற்றார்,
.தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் திரு மு. மோகன்குமார், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வட்டாரச் செயலாளர் திரு கி. ஞானசேகரன், வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் திரு. பா. சிவப்பிரகாசம், திருமதி வித்யா, தலைமை ஆசிரியர்கள் ஈ. அகிலாண்டேஸ்வரி,  மு. கயல்விழி, வே. சரஸ்வதி, இரா. செல்வமணி, த. கல்பனா, க. பொன்னி, இரா. கண்ணம்மாள், ச. காந்திமதி, கே. முருகம்மாள், அ. சித்ரா, சி. மகேந்திரன், பொ. கௌறம்மாள், த. கலைச்செல்வி, ஆகியோரும் உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, த. அமுதா, ஆனந்தகுமார், இரா. முருகன், த.லதா, நா. அருண், வீரபத்திரன், சுகாதார செவிலியர் கௌரி ஆகியோரும் உறவினர்கள் பலரும் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள் திருமதி மா. அனுசுயா, ஜெ. யசோதா கியோருக்கு மைய ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள்  சிறப்பு செய்தனர்.

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் திருமதி இரா. வசந்தி மேற்பார்வையாளர் மற்றும் திருமதி கோ. மாதேஸ்வரி கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் கெங்கபிராம்பட்டி குறு வளமைய பள்ளிகளைச் சார்ந்த அனைத்து ஆசிரியர்கள், கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் இரு ஆசிரியர்களின் உறவினர்கள் என அதிகமானவர்கள் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் மைய உதவி ஒருங்கிணைப்பாளர் திரு சுரேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.