ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா.......






ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டு குறு வளமையம் சார்பில் இன்று (08.04.2018)  பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
மைய ஒருங்கிணைப்பாளரும் ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியருமான திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாத உதவி ஆசிரியர் திருமதி சுகுணா அனைவரையும் வரவேற்றார்,
.தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் திரு மு. மோகன்குமார், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வட்டாரச் செயலாளர் திரு கி. ஞானசேகரன், வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் திரு. பா. சிவப்பிரகாசம், திருமதி வித்யா, தலைமை ஆசிரியர்கள் ஈ. அகிலாண்டேஸ்வரி,  மு. கயல்விழி, வே. சரஸ்வதி, இரா. செல்வமணி, த. கல்பனா, க. பொன்னி, இரா. கண்ணம்மாள், ச. காந்திமதி, கே. முருகம்மாள், அ. சித்ரா, சி. மகேந்திரன், பொ. கௌறம்மாள், த. கலைச்செல்வி, ஆகியோரும் உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, த. அமுதா, ஆனந்தகுமார், இரா. முருகன், த.லதா, நா. அருண், வீரபத்திரன், சுகாதார செவிலியர் கௌரி ஆகியோரும் உறவினர்கள் பலரும் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள் திருமதி மா. அனுசுயா, ஜெ. யசோதா கியோருக்கு மைய ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள்  சிறப்பு செய்தனர்.

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் திருமதி இரா. வசந்தி மேற்பார்வையாளர் மற்றும் திருமதி கோ. மாதேஸ்வரி கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் கெங்கபிராம்பட்டி குறு வளமைய பள்ளிகளைச் சார்ந்த அனைத்து ஆசிரியர்கள், கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் இரு ஆசிரியர்களின் உறவினர்கள் என அதிகமானவர்கள் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் மைய உதவி ஒருங்கிணைப்பாளர் திரு சுரேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
















































































வெள்ளி, 6 ஏப்ரல், 2018

பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் சமூகத் தணிக்கைக் குழுக் கூட்டம்



இன்று 27.03.2018.ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மற்றும் சமூக தணிக்கைக் குழுக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி கு. ஆனந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.. பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தற்போதைய பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து அடுத்த கல்வி ஆண்டுக்கான சிறப்புச் செயல்பாடுகள் மற்றும் புதிய செயல் திட்டங்கள் பற்றி விளக்கினார்.
பின்னர் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப் பென்சில் பெட்டிகளும், 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டிகளும் வழங்கப்பட்டது.
அனைத்து உறுப்பினர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1.
அனைத்து வகுப்புகளுக்கும் ஆங்கில பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் கற்றல்/கற்பித்தல் முறைகளை பயன்படுத்துதல்.
தீர்மானம் : 2.
அனைத்து பாடங்களும் காணொளி மூலம் நடத்திடும் பொருட்டு சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் கணினி பாடங்களை தயாரித்து வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளல்.
தீர்மானம் : 3.
பாட இணைச் செயல்பாடுகளான சுற்றுச் சூழல் மன்றம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், கல்வி களப் பயணங்கள், கல்விச் சுற்றுலா, அறிவியல் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை தொடர்ந்து சிறப்பாக நடத்துதல்.
தீர்மானம் : 4.
அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளல்.
தீர்மானம் : 5.
பள்ளி எல்லைக்குட்பட்ட அனைத்து கிராமப் பகுதியிலும் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர் கணக்கெடுப்பை மேற்கொள்ளல்.
தீர்மானம் : 6.
அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து மாண்வர்களுக்கும் டை, பெல்ட், பேட்ச், ஷூ மற்றும் அடையாள அட்டைகள் பள்ளியின் மூலம் வழங்குதல்.
தீர்மானம் : 7.
அனைத்து மாணவர்களுக்கும் அரசு வழங்கும் சீருடையோடு கூடுதலாக திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பயன்படுத்தும் வகையில் புதிய வண்ண சீருடை வழங்குதல்.
தீர்மானம் : 8.
பள்ளியில் பகுதி குறைவாக உள்ள 50 மீட்டர் நீள சுற்றுச் சுவர் மற்றும் நுழைவு வாயில் அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளல்.
 தீர்மானம் : 8.
அடுத்த ஆண்டு பள்ளியில் ஆண்டுவிழா நடத்துதல்.
      கூட்டத்தில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி மோ. ஐஸ்வர்யா, துணைத் தலைவர் அம்பிகா, உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்