ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (08.03.2018) சர்வதேச மகளிர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் மகளிர் தினவிழா கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் இவ்விழா நாள் உலகம் முழுமையும் கொண்டாடப்படுவற்கான காரணம் ஆகியவற்றை விரிவாக எடுத்துக் கூறி மகளிர் தமக்கான உரிமை வேண்டி முதன் முதலில் பிரான்சில் குரல் கொடுத்ததையும், பின்னர் அது மாபெரும் கிளர்ச்சியாக ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளில் பரவியதையும் எடுத்துக்கூறி, 1848 மார்ச் 8 அன்று லூயிஸ் பிளங்க் அவர்களால் பிரான்சின் புரூஸ்ஸிலியில் அமைக்கப்பட்ட இரண்டாவது குடியரசில் முதன் முதலில் அமைச்சரவையில் பெண்களுக்கு பிரதிநித்துவம் வழங்கபட்டதையும், அதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கினங்க ஒவ்வோராண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது எனவும் கூறினார்,
பின்னர் பெண் குழந்தைகள் மற்றும், பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு, பெண்கல்வி, பெண் உரிமை உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு பாடல்கள், கவிதைகள், பேச்சு ஆகியவற்றை மாணவர்கள் வழங்கினர் இதில் பெண் குழந்தைகள் மட்டுமே பங்கு பெற்றது சிறப்புக்குறியது.
அடுத்து நிகழ்வில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கும், பெண் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பரிசுகள் வழங்கினார். அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி நா. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் உதவி ஆசிரியர் திருமதி த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி ச. இனியா அனைவருக்கும் நன்றி கூறினார்.