திங்கள், 9 அக்டோபர், 2017

கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா - 2017

ஊத்தங்கரை ஒன்றியம் ,ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 09.10.2017 ல் கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் அடுத்தவர்களுக்கு நாம் கொடுத்து உதவுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை பல்வேறு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி விளக்கினார். எனவே அனைவரும் மற்றவர்களுக்கு னம்மால் முடிந்த உதவிகளை எப்போதும் செய்து வரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
பின்னர் மாணவர்கள் கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா  - வை சிறப்பிக்கும் வகையில் தமது நண்பர்களுக்கு பரிசுப் பொருட்களை  வழங்கி மகிழ்ந்தனர்.
 தொடர்ந்து உதவி ஆசிரியர்கள் திருமதி நா. திலகா, திருமதி த. லதா, ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக்கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற வினாடி - வினாப் போட்டியில் பங்கேற்ற துறிஞ்சிப்பட்டி பள்ளியின் மாணவர்கள் மூவர் மற்றும் தலைமை ஆசிரியர் திருமதி கா.க. சாந்தி ஆகியோருக்கு ஊக்கப் பரிசுகள் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
 இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செவ்வாய், 3 அக்டோபர், 2017

விலையில்லா கல்விப் பொருள்கள் வழங்கும் நாள்விழா

இன்று 03.10.2017 செவ்வாய்க்கிழமை ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில்பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா கல்விப் பொருட்கள் வழங்கும் விழா கொண்டாடப்பட்டது.
 
முன்னதாக முதல் பருவ விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் வரவேற்பு அளித்து இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளியில் தொடர்ந்து பள்ளியில் சரஸ்வதி பூசை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளியில் படிக்கும்  அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், சீருடைகள் வழங்கப்பட்டது.
இதை வழங்கிய தலைமை ஆசிரியர் அவர்கள் விலையில்லா கல்விப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், அதை முறையாக பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக கல்வி கற்றிட முன்வர  வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி த. இலதா, திருமதி ந. திலகா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

பள்ளியில் சரஸ்வதி பூசை நாள்விழா....

இன்று 03.10.2017 செவ்வாய்க்கிழமை ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் சரஸ்வதி பூசை (விஜயதசமி) விழா கொண்டாடப்பட்டது.