வியாழன், 12 ஜனவரி, 2017

பள்ளியில் பொங்கல் விழா - 2017




ஊத்தங்கரை ஒன்றியம் ,ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 12.01.20167 ல் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் பொங்கல் விழா தொடர்பான பல்வேறு செய்திகளையும், இவ்விழாவின் அவசியம் குறித்தும் பல்வேறு நிகழ்வுகளை பட்டியலிட்டுக் காட்டி, உழவரின் தியாகம் பற்றியும் விரிவாகக் கூறி, மாணவர்கள் விவசாயம் தொடர்பான அனைத்து செய்திகளையும் அரிய வேண்டுமெனவும் விவசாயத்தைப் போற்ற கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
பின்னர் உதவி ஆசிரியர்கள் திருமதி நா. திலகா, திருமதி த. லதா திருமதி அ. நர்மதா ஆகியோரும் பொங்கல் குறித்து கருத்துரை வழங்கினர்.
 பின்னர் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் பொங்கல் வைக்கப்பட்டு இறை வழிபாட்டுக்குப் பின் விழாவில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் பொங்கல்  வழங்கப்பட்டது.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.




























































































செவ்வாய், 3 ஜனவரி, 2017

திறனாய்வுத் தேர்வு சிறப்புப் பயிற்சி முகாம்




ஊத்தங்கரை ஊராட்சி துவக்கப் பள்ளியில் இன்று 03.01.2017 ல் தேசியத் தினாய்வுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு மு. விஜயராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில், கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி த. மகேஸ்வரி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விழாவில் அருந்ததியர் காலணி தலைமை ஆசிரியர் திரு செ. வெங்கடேசன், ஊ.ரெட்டிப்பட்டி தலைமை ஆசிரியர் திரு மா. கிருஷ்ணமூர்த்தி, ஒட்டம்பட்டி தலைமை ஆசிரியர் திரு கி. ஞானசேகரன் மற்றும் ஒன்றிய வளமைய  பொருப்பு மேற்பார்வையாளர் திரு கா. நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் ஜோதிநகர் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பயிற்சி முகாமின் க்கம் மற்றும் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கிக் கூறினார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட அதியமான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு சீனி. திருமால் முருகன் அவர்கள் விழாவில்  சிறப்புரை ஆற்றி முகாமைத் துவக்கி வைத்தார்.
இன்றைய பயிற்சி முகாமில் ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சார்ந்த 18 பள்ளிகளில் இருந்து 130 மாணவர்கள் மற்றும் அப்பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். 

பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களாக திரு இரா. சசிக்குமார், திரு ஸ்ரீதர், திரு விஜயன், திரு கலைச்செல்வன், திரு அருண்குமார் ஆகியோரும், பயிற்சி ஒருங்கிணைப்பாளராக ஜோதிநகர் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களும் செயல்படுவர்.
இறுதியில் ஊத்தங்கரை தலைமை ஆசிரியர் திரு கே. முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.












திங்கள், 2 ஜனவரி, 2017

மூன்றாம் பருவ விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா – 206-17




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று  02.01.2017 மாணவர்களுக்கான மூன்றாம் பருவ விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது .
                 பள்ளித் தலைமை ஆசிரியர்  திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு  விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகளும், விலையில்லா சீருடைகளும்  வழங்கப்பட்டது.
மேலும் 3 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு  விலையில்லா புத்தகப் பைகளும், 3,4 வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பாடுகளும், 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா நிலப்பட நூல்களும் வழங்கப்பட்டது.
           விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு. லட்சுமி, த. லதா, ந. திலகா, அ. நர்மதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் கலந்துக் கொண்டனர்