இன்று 12.12.2016
திங்கட்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக காலையில் பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பாரதியாரின் படத்திற்கு
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பள்ளித் தலைமை
ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் பாரதியார்
தமது புரட்சிகரம் மிக்க பாடல்கள் மூலம் இந்திய மக்களை, குறிப்பாக தமிழக மக்களை சுதந்திர
போராட்டத்தில் ஈடுபட விழிப்புணர்வு ஊட்டியமை குறித்தும், இன்று அகில இந்தியா முழுமையும் உள்ள அனைத்து பள்ளி,
கல்லூரிகளிலும் பாரதியாரின் பிறந்தநாள் விழா
கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கு காரணம் பாரதியாரின் தன்னலமற்ற பங்களிப்புதான் என்பது
குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்திட முன்வர
வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் பாரதியார்
பிறந்தநாள் தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல் மற்றும் ஓவியப் போட்டிகளில் தமது
திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன் பின்னர் போடிகளில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி
மு. இலட்சுமி, திருமதி த. இலதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.