இன்று 02.12.2016 வெள்ளிக்கிழமை எமது
பள்ளியில் பள்ளி
சுற்றுச்சூழல் மன்றம்
சார்பில் தேசிய மாசு கட்டுப்பாடு நாள் மற்றும் உலக கணினிக் கல்வி நாள் ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை
ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி
உதவி
ஆசிரியர் திருமதி அ. நர்மதா அவர்கள் இயற்கை
மாசுபாடுகள் குறித்து பல
தகவல்களைக் கூறி
அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமை
ஆசிரியர் தமது
தலைமை
உரையில் இன்று
நாடு
முழுமையும் தேசிய மாசு கட்டுப்பாடு நாள் மற்றும் உலக கணினிக் கல்வி நாள் கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கு
காரணம்
இன்றைய
சுற்றுச் சூழலைக் காப்பது நமது
அனைவரின் கடமை
என்பது
குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் சுற்றுச்சூழல் மாசு
அடையாமல் இருப்பற்கான விழிப்புணர்வு பெறுவதோடு அதற்கான சரியான
செயல்
திட்டங்களை செயல்படுத்திட முன்வர
வேண்டும் எனவும்
கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, 1984ஆம்
ஆண்டு
மத்தியப் பிரதேசம் போபால்
யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விபத்து பற்றியும், அதில்
50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தது மற்றும் பல
இலட்சம் பேர்
பாதிக்கப்பட்டது குறித்தும் குறிப்பிட்டு, அதன்
நினைவாகவே நமது
நாட்டில் ஆண்டுதோறும் டிசம்பர் 2ல்
தேசிய
மாசு
கட்டுப்பாட்டு நாள்
கடைபிடிக்கபடுவதாகவும் கூறினார்.
தொரட்ந்து இன்றைய
உலகில்
அனைவருக்கும் அவசியமான கணினிக் கல்வி
குறித்தும் அது
தமது
பள்ளியில் சிறப்பாக வழங்கப்பட்டு வருவது
குறித்தும் விரிவாகப் பேசி
அனைவரும் கணினிக் கல்வியில் சிறப்பு பெற்று
உலகம்
முழுமையும் வலம்
வர
வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பள்ளி
மாணவர்கள் மாசுகட்டுப்பாடு மற்றும் கணினிக் கல்வி
குறித்து சிறப்பாக பேசினர்.
அதன் பின்னர் போட்டிகளில் வெற்றி
பெற்ற
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..
இறுதியில் உதவி
ஆசிரியர் திருமதி நா.
திலகா
அனைவருக்கும் நன்றி
கூறினார்.