வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்.....






இன்று 10.08.2016.ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி சி. இராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.. பின்னர் தற்போதைய அரசு ஆணையின் படி பள்ளி கிராமக் கல்விக்குழு வங்கி கணக்கு  இனி பள்ளி மேலாண்மைக்குழுக் கணக்காக பெயர் மாற்ரம் செய்யப்படுவதோடு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஆகியோரால் கூட்டாக இயக்கப்படல் வேண்டும் என ஆணையிட்டுள்ளதால் தற்போதைய கணக்கு மாற்ரப்படல் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

 மேலும் தற்போது பள்ளி மேலாண்மை குழு தலைவராக உள்ள திருமதி பூ. கனகராணி அவர்களின் மகன் 8ம் வகுப்பு முடித்து இப்பள்ளியில் இருந்து சென்று விட்டமையால் அவர் தலைவர் பதவியை தானாகவே இழக்கிறார் எனவே அவருக்கு பதிலாக புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

      அதன்படி இன்று கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி சி இராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலோடு கீழ்க்கண்ட புதிய பள்ளி மேலாண்மைக் குழு தேர்வு செய்யப்பட்டது,

1.   தலைவர்             :      கு. ஆனந்தி
2.   து. தலைவர்          :      மு. அம்பிகா
3.   நடத்துனர்/த.ஆ        :      செ. இராஜேந்திரன்
4.   ஆசிரிய உறுப்பினர்    :      மு. இலட்சுமி
பெற்றோர்கள்
5.   அ. பச்சையப்பன்
6.   வி. பெரியவேடி
7.   சே. மணிமேகலை
8.   சா. இராதா
9.   வே. இராஜகுமாரி
10.  பெ. பரமேஸ்வரி
11.  செ. செல்வி
12.  அ. சுகந்தி
13.  கோ. அமராவதி
14.  ச. சாந்தி
15.  சே. சகுந்தலா
16.  வே. கீதா
மக்கள் பிதிநிதிகள் :     
17.  டி. பூபதி
18.  வே. குமாரசாமி
19.  கல்வியாளர்          :      கு. பிரகாஷ்
20.  சுய உதவிக் குழு      :      செ. சித்ரா
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்



















வியாழன், 11 ஆகஸ்ட், 2016

ஊத்தங்கரை வானவில் புத்தகக் கண்காட்சியில் எமது மாணவர்கள்......

       ஊத்தங்கரையில் கடந்த வாரம் நடைபெற்ற வானவில் புத்தகக் கண்காட்சியை எமது பள்ளியின் 4 முதல் 8 வகுப்பு  வரையிலான மாணவர்கள்  03.08.2016 அன்று பார்வையிட்டு பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்களை வாங்கி வந்தனர்.