வியாழன், 11 ஆகஸ்ட், 2016

முத்து விழா ஆண்டு நிறைவு நாள் விழா.....


  இன்று 11.09.2016ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியேற்ற முத்து விழா ஆண்டு நிறைவு நாள்  விழா நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ.இராஜேந்திரன் அவர்கள் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகளை நிறைவு செய்யும், முத்து விழா ஆண்டு நிறைவுநாள் விழாவிற்கு பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில்,பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்      இன்றைய முத்துவிழா ஆண்டு நிறைவுநாள் பற்றி எடுத்துக் கூறி தான் பணியேற்று முப்பது ஆண்டுகள் நிறைவு பெற்றாலும் கூட இன்றும் நான் புதிதாக பணியேற்ற ஆசிரியராகவே உணர்கிறேன் என்றும், தமது பணிக்காலத்தில் மேற்கொண்ட பல்வேறு சிறப்புப் பணிகளையும் பட்டியலிட்டு கூறியதோடு இன்றைய ஆசிரியர்கள் அனைவரும் தன்னை பின்பற்றுவதை விட தனது பணியை தொடர வேண்டுமென கேட்டுகொண்டார்.

பின்னர் கடந்த ஆண்டு இதே நாள் 30ம் ஆண்டு தொடக்க நாளில் இவ்வாண்டு பள்ளியில் 30க்கு குறையாமல் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டுமெனவும், அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் இவ்வாண்டு 37 சிறப்பு நிகழ்ச்சிகள்  நடந்துள்ளதை பட்டியலிட்டு காட்டி அதற்கு துணை நின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றியைக் கூறினார்.
பின்னர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ளும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிப்பும், நினைவு பரிசுகளும் வழங்கினார்.

தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு  சந்தன மாலையோடு சால்வை போர்த்தி மரியாதை செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஒருசில செயற்பாடுகளில் தனக்கு உடன்பாடில்லை என்றாலும் கூட  அதைச் செய்பவர்களின் மன மகிழ்ச்சிக்காக ஏற்க வேண்டிய சூழல் அமைந்து விடுகிறது. அதில் ஒன்றுதான் இன்று அன்பின் மிகுதியால் எனது உதவி ஆசிரியர்கள் எனக்கு  இட்ட மனக்கும் சந்தன மாலையும், மயக்கும் சால்வையும்கூட.

விழாவில்  உதவி ஆசிரியர்கள் திருமதி த.லதா, அ.நர்மதா  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார்.



































புதன், 10 ஆகஸ்ட், 2016

தேசிய குடற்புழு நீக்க நாள்.......




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று 10.08.2016 ல் கடைபிடிக்கப்பட்டது......

          பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

              பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் தேசிய குடற்புழு நீக்க நாளின் அவசியம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றியும், வயிற்றில் காணும் குடற்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கினார். மேலும் இந்தியா முழுதும் இன்று 1 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மேற்கொண்டு உள்ளது எனவும் விளக்கம் அளித்தார்.
                பின்னர் பள்ளியில் இருந்த அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.
விழாவில் உதவி ஆசிரியர் திரு .வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.

            நிகழ்வில் கிராமக் கல்விக் குழு தலைவர் திரு தி. பூபதி, உதவி ஆசிரியர்கள் திருமதி நா.திலகா, . லதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.












திங்கள், 1 ஆகஸ்ட், 2016

கெங்கபிராம்பட்டி குறுவள மைய அளவிலான சதுரங்கப் போட்டிகள் - 2016



இன்று 01.08.2016 திங்கட்கிழமை கெங்கபிராம்பட்டி குறுவள மைய அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.
முன்னதாக போட்டிகளை  மைய ஒருங்கிணைப்பாளரும், ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியருமான திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டிகள் நடத்துவதன் அவசியம் பற்றியும் மாணவர்களின் திறன் வெளிப்பாட்டிற்கு இப்போட்டிகள் எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறியும், போட்டிக்கான விதிமுறைகளை  எடுத்துக்கூறியும் போட்டிகளைத் துவக்கி வைத்தார்
பின்னர் பள்ளி மாணவர்கள் 1 முதல் 5 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நான்கு சுற்று போட்டிகளுக்குப் பின் கீழ்க்கண்ட  மாணவர்கள் முதல் இரண்டு இடங்களுக்கு தேர்வு செய்யப்பபட்டனர்.

6 முதல் 8 வகுப்புப் பிரிவு :
ஆண்கள்              பெண்கள்

முதலிடம்      :     பூ. தனுஷ்           டி. இலக்கியா
                     ஜோதிநகர்                  நாப்பிராம்பட்டி
இரண்டாமிடம்  :     இர. ஸ்ரீதர்            தே.ஐஸ்வர்யா
                     கொண்டம்பட்டி             நாப்பிராம்பட்டி

1 முதல் 5 வகுப்புப் பிரிவு :
               
முதலிடம்      :     சு. விக்னேஷ்        வே. ஹரிதாரணி
                     கொண்டம்பட்டி             நாப்பிராம்பட்டி
இரண்டாமிடம்  :     ச.ரித்திக்             வே. கலையரசி
                     நாப்பிராம்பட்டி              ஜோதிநகர்


அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கெங்கபிராம்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி அனுசுயா உள்ளிட்ட கெங்கபிராம்பட்டி மையத்தைச் சார்ந்த ஜோதிநகர், உப்பாரப்பட்டி, கொண்டம்பட்டி, நாப்பிராம்பட்டி, சின்னக்குன்னத்தூர், ஆகிய பள்ளிகளின் ஆசிரியர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.