வெள்ளி, 1 ஜூலை, 2016

எமது பள்ளியில் இன்று.......

 
               எமது பள்ளியில் கடந்த 29.06.2016 அன்று 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கழுத்தணி (டை), இடுப்பணி (பெல்ட்), அடையாள வில்லை (பேட்ச்) ஆகியனவும், 1 முதல் 3 வகுப்புகள் வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வேறுபட்ட வண்ணச் சீருடைகளும் வழங்கப்பட்டது. அதை முதல் முறையாக இன்று அணிந்து வந்து கம்பீரமாக காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். 
           அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிய தலைமை ஆசிரியர் தனியார் பள்ளிக்கு இணையான சீருடைகளை இன்று அணிந்துள்ள நாம் அவர்களுக்கு நிகராக அல்ல, அவர்களுக்கு மேலாக சிறப்பான கல்வியை கற்று வெளிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுகொண்டார்.














புதன், 29 ஜூன், 2016

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் - 2016



பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்
இன்று 29.06.2016ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்  நடைபெற்றது.
     பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி சி. இராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது உரையில் இன்று நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தின் அவசியம் பற்றியும் பள்ளியில் தற்போது நடைமுறையில் உள்ள கணினிக் கல்வி, உள்ளிட்ட சிறப்புத் திட்டங்கள் பற்றியும் விவாக எடுத்துக்கூறி, இவ்வாண்டு மேற்கொள்ள உள்ள சிறப்புத் திட்டங்கள் பற்றியும் விளக்கினார். தொடர்ந்து இவ்வாண்டு மாவட்ட, ஒன்றிய அளவில் நடைபெற உள்ள அனைத்து விதமான போட்டிகளிலும் இப்பள்ளி மாணவர்களை பங்குபெறச் செய்து வெற்றிபெற உரிய சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் கூறினார்,  இதற்கு பெற்றோர்கள் அனைவரும்  முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
     அடுத்து கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு ப. சிவப்பிரகாசம் அவர்கள் இப்பள்ளியின் பல்வேறு சிறப்புக்களை எடுத்துக்கூறி, மற்ற பள்ளிகளில் இருந்து இப்பள்ளி எந்தெந்த வகைகளில் சிறப்பு பெறுகிறது என்பதை பட்டியலிட்டு, இப்பள்ளியில் மாணவர்களைச் சேர்த்து படிக்க வைப்பதே சிறப்பு எனக்கூறி முடித்தார்.
     பின்னர் அனைத்து பெற்றோர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் 1 முதல் 3 வகுப்பு வரையுள்ள ஆங்கிலவழி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு சீருடைகள் வழங்கப்பட்டது, 1 முதல் 8 வகுப்புகள் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இடுப்பணி(பெல்ட்), கழுத்தணி(டை), அடையாள வில்லை(பேட்ஜ்) ஆகியன வழங்கப்பட்டது. விரைவில் நிழற்படத்துடன் கூடிய அடையாள அட்டை (ஐ.டி கார்ட்) வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1
     நமது பள்ளி கிராமத்தின்  எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கபட்டு படித்து வருகிறார்கள் என்ற நிலையை உறுதி செய்தல்.  
தீர்மானம் : 2
     இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை மேம்படுத்தும் பொருட்டு ஒன்று முதல் மூன்று வரையில் பயிலும் ஆங்கில வழி மாணவர்களுக்கு மட்டும் புதிய மாறுபட்ட வண்ணமுடைய சீருடை வழங்கவும், அதை வாரம் இரு நாட்கள் மட்டும் பயன்படுத்தவும், மீதமுள்ள நாட்களில் அரசு வழங்கும் சீருடைகளைப் பயன்படுத்தவும் தீர்மானிக்கபடுகிறது.
தீர்மானம் : 3
     ஒன்று முதல் எட்டு வகுப்பு வரையிலான அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கழுத்தணி, இடுப்பணி, அடையாளவில்லை, அடையாள அட்டை ஆகியன வழங்கி அதை தினமும் அணிந்துவர தீர்மானிக்கபடுகிறது.
தீர்மானம் : 4
     இவ்வாண்டு கணினிக் கல்விக்கு கூடுதல் கவணம் செலுத்தி அனைத்து குழந்தைகளும் கணினியில் சிறப்பாக செயல்பட பயிற்சி அளித்தல் மற்ரும் ஒத்துழைப்பு அளித்தல்.
தீர்மானம் : 5
     தற்போது முழுமை பெறாமல் உள்ள பள்ளியின் சுற்றுச் சுவரை முழுமைபெறச் செய்து வாயில் கதவு அமைத்திட முயற்சி மேற்கொள்ள தீர்மானிக்கபடுகிறது.
தீர்மானம் : 6
     மாணவர்களின் குடிநீர் மற்றும் கழிவறை பயன்பாட்டுக்கான நீர் தற்போது கைப்பம்பு மூலம் பெறுவதால், அதில் மின்மோட்டார் பொருத்திட உரிய முயற்சி மேற்கொள்ள தீர்மானிக்கப்படுகிறது.
     தீர்மானம் : 7
     இவ்வாண்டு வழக்கம் போல் அறிவியல் கண்காட்சியை நடத்துவது எனவும், அதில் மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்களை கலந்துக்கொள்ள அழைப்பது எனவும் தீர்மானிக்கபடுகிறது.
     கூட்டத்தில் கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி உள்ளிட்ட அனைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர்.
     இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்