புதன், 14 அக்டோபர், 2015

கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா - 2015




      ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொடுப்பதில் மகிழ்வு வாரவிழா நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விழாவில் பள்ளித்தலைமை ஆசிரியர் அவர்கள் தமது உரையில் நாம் அடுத்தவரிடம் பெறும் போது அடையும் மகிழ்ச்சியைவிட, அடுத்தவர்களுக்கு கொடுக்கும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைய வேண்டும். என அனைத்து மாணவர்களிடமும் கேட்டுகொண்டார். மேலும் அடுத்தவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையை இளம் வயதிலேயே வளர்த்துக்கொள்ள வேண்டியே இதுபோன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது எனக்கூறி அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
          அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தாம் கொண்டுவந்த/தயாரித்துவந்த பரிசுப் பொருட்களை தமக்குப் பிடித்த மாணவ நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கி தமது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சி பார்ப்போர் அனைவரையும் கவர்வதாய் அமைந்தது.
            விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, திருமதி நா. திலகா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
          இறுதியில் உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும்  நன்றி கூறினார்.






























































வெள்ளி, 9 அக்டோபர், 2015

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (09.10.2015) பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி பூ. கணகராணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். அப்போது அவர் தனது உரையில் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி நிலைகள் பற்றியும், பள்ளி மாணவர்களின் பன்முகத் திறன் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
இன்றைய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு சிவப்பிரகாசம் அவர்கள் இப்பள்ளியில் காணும் பல்வேறு சிறப்புச் செயல்பாடுகளைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்வதாகவும், இப்பள்ளியில் அனைத்து பெற்றோர்களும் தமது குழந்தைகளை தயக்கமின்றி சேர்த்து, தரமான கல்வி பெற்றிட வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.
அடுத்து பேசிய பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  திருமதி சி. இராஜேஸ்வரி அவர்கள் பள்ளியின் தற்போதைய சிறப்பான செயல்பாடுகளுக்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டார்.
பின்னர் அனைத்து உறுப்பினர்களின் கருத்துரைகளுக்குப் பின் பள்ளி வளர்ச்சிக்கான பல்வேறு தீர்மானங்கள்  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  கூட்டத்தில் பட்டதாரி உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி நா. திலகா ஆகியோரும் அனைத்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.