அன்மையில் காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற காஞ்சி முத்தமிழ் சங்கத்தில் கலைமாமணி வி.ஜி. சந்தோசம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முகநூலை சமூக அக்கறையோடும், அறிவு சார்ந்த பகிர்வோடும் பயன்படுத்துவதை பாராட்டி ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு கவி. செங்குட்டுவன் @ செ. இராஜேந்திரன் அவர்களுக்கு கலைமாமணி, உலகப்புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர், பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் அவர்களால் ”முகநூல் வேந்தர்” விருது வழங்கப்பட்டது.
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015
பொது நூலகத்தில் எமது பள்ளி மாணவர்கள்.......
எமது பள்ளி மாணவர்கள் 40 பேர் ஊத்தங்கரை அரசு பொது நூலகத்தை பார்வையிட்டனர்.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள அரசு பொது நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் அனைத்து போட்டித்
தேர்வுக்கும் தேவையான விலை உயர்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உட்பட 32,000 நூல்கள் உள்ளன.
மேலும் இணைய இணைப்புடன் கூடிய 3 கணினிகள், அச்சுப் பொறியுடன் கூடிய நகல் எடுக்கும் இயந்திரம் ஆகியவை பொது மக்கள் மற்றும் மாணவர்களின்
பயன்பாட்டுக்காக உள்ளன. மேலும் இங்கு செய்தித் தாட்கள் பகுதி, சிறுவர் நூல்கள் பகுதி, ஆங்கில நூல்கள் பகுதி என பலபகுதிகள் உள்ளன. இந்த நூலகத்தை எமது மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு
பார்த்தனர்.
பின்னர் இந்நூலகத்தின் நூலகர் திரு க. கோபிநாதன் மற்றும் திரு சண்முகம் ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)