ஊத்தங்கரை
ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்திய திநாட்டின் 69வது சுதந்திர
தின விழா நடைபெற்றது.
முன்னதாக
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி சி. இராஜேஸ்வரி அவர்கள் பள்ளியில் தேசியக்
கொடியை ஏற்றிவைத்தார். அதன் பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி
உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விழாவில் இந்திய
சுதந்திர தினவிழா தொடர்பாக 7ம் வகுப்பு மாணவர் தமிழரசன் தமிழிலும், இரண்டாம் வகுப்பு
மாணவர் தினேஷ் ஆங்கிலத்திலும் உரையாற்றினர். பின்னர் மாணவர்கள் கவிதைகளையும் வழங்கினர்,
தொடர்ந்து அண்ணல் காந்தி, ஜவகர்லால்நேரு, இந்திராகாந்தி ஆகியோர் போன்று வேடமிட்ட மாணவர்கள்
இந்திய சுதந்திர வரலாற்றை தமிழிலும், ஆங்கிலத்திலும் வழங்கினர்.
அதனைத்
தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், குஜராத், ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட மாநில மக்களின்
கலாச்சார உடைகளோடு வலம் வந்த மாணவர்கள் அந்த மாநிலத்தையே நம்கண்முன் நிறுத்தும் வகையில்
தத்தமது மாநிலத்தின் ஆட்சியாளர், மக்கள்தொகை, மாவட்டங்கள், பேசும் மொழி தொடர்பான அடிப்படைத் தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சி
பார்ப்போர் அனைவரையும் கவர்வதாய் அமைந்தது.
பின்னர்
நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள், மற்றும் 1 முதல் 8 வரையிலான அனைத்து வகுப்புகளிலும்
கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில்
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி பூ. கனகராணி, உள்ளிட்ட பெற்றோர்கள் மற்றும்
பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
விழாவை
பள்ளி உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா தொகுத்து வழங்கினார்.
இறுதியில்
உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.