ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 40பேர் இன்று (13.08.2015) ஊத்தங்கரையில் நடைபெற்று வரும் வானவில் புத்தகக் களஞ்சியம் சார்பிலான புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் வந்த மாணவர்கள் முதல் முறையாக ஓர் புத்தகக் கண்காட்சியை பார்வயிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள் . முன்னதாக அவர்களுக்கு புத்தகக் கண்காட்சி பற்றியும் அதன் நோக்கம் பற்றியும், இங்கு இடம்பெற்றுள்ள நூல்கள் பற்றியும் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டது.
பின்னர் புத்தகக் கண்காட்சியை முழுமையாகப் பார்வையிட்ட மாணவர்கள் தமக்குத் தேவையான புத்தகங்களையும் அவர்களே தேர்வு செய்து விலைக்கும் வாங்கினார்கள். இவை இப்புத்தகக் கண்காட்சியின் நினைவாக பயன்படுத்துவோம் எனவும் தமது வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ள பயன்படும் எனவும் மாணவர்கள் கூறினர்.