செவ்வாய், 7 ஜூலை, 2015

கெங்கபிராம்பட்டி குறுவள மைய அளவிலான சதுரங்கப் போட்டிகள்.........2015



இன்று 06.07.2015 திங்கட்கிழமை எமது கெங்கபிராம்பட்டி குறுவள மைய அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.
முன்னதாக போட்டிகளை  மைய ஒருங்கிணைப்பாளரும், ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியருமான திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டிகள் நடத்துவதன் அவசியம் பற்றியும் மாணவர்களின் திறன் வெளிப்பாட்டிற்கு இப்போட்டிகள் எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறியும், போட்டிக்கான விதிமுறைகளை  எடுத்துக்கூறியும் போட்டிகளைத் துவக்கி வைத்தார்
பின்னர் பள்ளி மாணவர்கள் 1 முதல் 5 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நான்கு சுற்று போட்டிகளுக்குப் பின் கீழ்க்கண்ட  மாணவர்கள் முதல் இரண்டு இடங்களுக்கு தேர்வு செய்யப்பபட்டனர்.

1 முதல் 5 வகுப்புப் பிரிவு :
                ஆண்கள்                     பெண்கள்
முதலிடம்       :     கே.சத்தியமூர்த்தி           வே. கலையரசி
                     சின்னகுன்னத்தூர்           ஜோதிநகர்
இரண்டாமிடம்   :     மா. இளவரசன்        எஸ். பிரியதர்ஷினி
                     ஜோதிநகர்                  நாப்பிராம்பட்டி

6 முதல் 8 வகுப்புப் பிரிவு :

முதலிடம்       :     நா. தினேஷ்          டி. இலக்கியா
                     ஜோதிநகர்                  நாப்பிராம்பட்டி
இரண்டாமிடம்   :     பி. மோகன்           வே. சர்மிளா
                     கொண்டம்பட்டி             ஜோதிநகர்

அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கெங்கபிராம்பட்டி பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி அனுசுயா உள்ளிட்ட கெங்கபிராம்பட்டி மையத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.



















பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் - 2015



இன்று 05.07.2015 வெள்ளிக்கிழமை எமது பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.

முன்னதாக போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டிகள் நடத்துவதன் அவசியம் பற்றியும் மாணவர்களின் திறன் வெளிப்பாட்டிற்கு இப்போட்டிகள் எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி  போட்டிகளைத் துவக்கி வைத்தார்
பின்னர் பள்ளி மாணவர்கள் 1 முதல் 5 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நான்கு சுற்று போட்டிகளுக்குப் பின் கீழ்க்கண்ட  மாணவர்கள் முதல் இரண்டு இடங்களுக்கு தேர்வு செய்யப்பபட்டனர்.

1 முதல் 5 வகுப்புப் பிரிவு :
                ஆண்கள்                     பெண்கள்
முதலிடம்       :     கு. விஷ்ணு                வே. கலையரசி
இரண்டாமிடம்   :     மா. இளவரசன்             சி. கோபிகா

6 முதல் 8 வகுப்புப் பிரிவு :

முதலிடம்       :     நா. தினேஷ்                வே. சர்மிளா
இரண்டாமிடம்   :     மு. சுந்தர்                  சு. அர்ச்சனா

அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திருமதி த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் திருமதி . நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.























புதன், 1 ஜூலை, 2015

அலுவலக உதவியாளருக்கு - பணிநிறைவு பாராட்டு விழா......

 
           ஊத்தங்கரை ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில்  கடந்த 18 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்த திரு எல். சாக்கன் அவர்கள் இன்று பிற்பகல் (30.06.2015) தனது அரசுப் பணியை நிறைவு செய்தார். அதன் பொருட்டு அவருக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சார்பில் பாராட்டுவிழா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 
         இதுவரையில் இவ்வலுவலகத்தில் யாருக்குமே நடைபெறாத அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திரு இர. பிரசாத், திருமதி த. மகேஸ்வரி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் திரு செ. வெங்கடேசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்டச் செயலாளர் திரு மா. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து சங்கங்களின் வட்டாரப் பொருப்பாளர்களும், ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துக்கொண்டனர்.
           அப்போது பேசிய அனைவரும் திரு சாக்கன் அவர்களின் கடந்த கால பணிகளை நினைவு கூர்ந்ததோடு,  60 வயது நிறைவடையும் இன்று கூட மிகச் சுறுசுறுப்போடும், மிக்க ஈடுபாட்டோடும் பணியாற்றி வந்தமை பற்றி எடுத்துக் கூறி பெருமிதம் அடைந்தனர்.