வியாழன், 2 ஏப்ரல், 2015

பள்ளி ஆண்டு விழா.............


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வலைப்பூ : www.kalvikoyil.blogspot.in மின்னஞ்சல் : pumsjothinager@gmail.com
பள்ளி ஆண்டு விழா
        ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 31.03.2015 பள்ளி ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
          விழாவிற்கு பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு த. பூபதி தலைமை தாங்கினார்.  பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் தற்போதைய 10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளதால் இவ்விழாவில் கலந்துக்கொள்ள இயலாமையால் அலைபேசி வழியே வாழ்த்து தெரிவித்த செய்தியை அனைவைரிடமும் பகிர்ந்துக்கொண்டார். அடுத்து இன்றைய விழாவில் இடம்பெறும் 32 நிகழ்வுகளில் 17 நிகழ்வுகள் மாணவர் திறன் வெளிப்படுத்தும், பாடம் தொடர்பான நிகழ்சிகள் ஆகும் எனவும், பிற 15 நிகழ்ச்சிகள் சிறியவர் முதல் பெரியவர் வரையில் அனைவரும் விரும்பி பார்வையிடத்தக்க ஆபாசம் கலக்காத திரைப்படப் பாடல்கள்  எனவும் சுட்டிக்காட்டினார்.
          பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். அதில் பள்ளியில் தற்போது நடைமுறையில் உள்ள மாணவர் நலன் சார்ந்த அனைத்து செயல்பாடுகளும் பட்டியலிடப்பட்டது.
         கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சி மன்றத் தலைவர் திருமதி அமுதாசெல்வம், முன்னால் தலைவர் திரு மு.செல்வராஜ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி சி. இராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற எழுத்தர் திரு எஸ். செல்வராஜ் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.
             ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் திரு கா. நேரு, ஆசிரியப்பயிற்றுனர் திருமதி ஆ. ஆர்த்தி, உப்பாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு எஸ். இரவி, கனக்கம்பட்டி துவக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி ஈ. அகிலாண்டேஸ்வரி, கொட்டுகாரம்பட்டி உதவி ஆசிரியர் திரு சே. லீலாகிருஷ்ணன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி ச. லோகநாயகி ஆகியோர் விழாவில் வாழ்த்துரை வழங்கினர்.
             ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இர. பிரசாத், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் .திருமதி த. மகேஸ்வரி ஆகியோர் விழாவில் சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
              விழாவில் பள்ளியில் 1 முதல் 8 வகுப்பு வரையில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற 8 மாணவர்களுக்கும், நடத்தை மற்றும் பிற சமூகச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 8 மாணவர்களுக்கும், பள்ளி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும்    2 மாணவர்களுக்கும், பள்ளி சுற்றுச் சூழல் மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 2 மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
         முன்னதாக இப்பள்ளியில் புதிதாக துவக்கப்பட்ட பள்ளி புரவலர் திட்டத்தில் இணைந்துள்ள 11 பேருக்கு சிறப்பு செய்யப்பட்டது. .
            பின்னர் மாணவர்களின் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் பள்ளி மாணவர்கள் அனைவரும் (மொத்த மாணவர்களில் ஒருவர் கூட விடுபடாமல்) தமது தனித் திறமைகளை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினர்.
         விழா நிகழ்வுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி அ. நர்மதா, த. இலதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
     விழாவில் உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
      விழாவில் இப்பள்ளியின் முன்னால் ஆசிரியர்கள் திரு. ப. சரவணன், திருமதி சு. சாரதா, திரு தீ. சிவராமன், திரு இரா. முரளி, வழக்கறிஞர்கள் திரு இரா, செல்வகுமார், திரு ச. சசிகுமார் மற்றும் திரு இளங்கோ, திரு சுகுமார், திரு சதாசிவம் ஆகியோரும், பள்ளி கிராமம் மட்டுமல்லாது  பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஏராளமான பெற்றோர்களும், பொதுமக்களும், மாணவர்களும் பங்கேற்று நிகழ்வுகளை கண்டுகளித்தனர்.





































































































திங்கள், 30 மார்ச், 2015

ஆண்டுவிழா - ஒத்திகை.........

            வரும் 31.03.2015 அன்று நடைபெற உள்ள பள்ளி ஆண்டுவிழாவுக்காக இன்று 29.03.2015 ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள எமது பள்ளி மாணவர்கள்...........





























சனி, 21 மார்ச், 2015

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிறந்த நாள் பரிசு

              வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் எனது பிறந்த நாளான மார்ச் 15 அன்று எனது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எழுது பொருட்களை பிறந்த நாள் பரிசாக வழங்குவது வழக்கம். 
         அதன்படி இவ்வாண்டு மார்ச் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் 16.03.2015 திங்கட்கிழமை எனது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எழுது பொருட்களும், இனிப்பும் வழங்கி மகிழ்ந்தேன். 












பள்ளிப் பாடல்கள் பதிவிரக்கம் செய்து பயன்படுத்த......

திங்கள், 16 மார்ச், 2015

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்...


      எமது பள்ளியில் இன்று (16.03.2015) பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. 
      பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி சி. இராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னதாக பள்ளீயின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில் பள்ளியின் தற்போதைய  வளர்ச்சி நிலைகள் பற்றியும், மாணவர்களின் திறன் வெளிப்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி, பள்ளி ஆண்டு  விழா நடத்துவது தொடர்பான தனது கருத்துக்களையும் எடுத்துரைத்தார். இதற்கு பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை எனவும் வலியுறுத்தினார்.
       பின்னர் அனைத்து பெற்றோர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

* பள்ளியின் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது.
*அதற்கு அனைத்து பெற்றோர்களும் முழுமையாக ஒத்துழைப்பு 
      நல்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
* ஆண்டு விழாவில் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான அனைத்து கல்வி 
     அலுவலர்களையும் அழைத்து சிறப்பு செய்தல்.
* விழாவில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஏதாவது ஒரு
     நிகழ்விலாவது பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகளை அமைத்தல்.
            இன்றைய கூட்டத்தில் பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி பூ. கனகராணி, உள்ளிட்ட பெற்றோர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
       இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.