வியாழன், 11 டிசம்பர், 2014

பாரதியார் பிறந்தநாள் விழா

இன்று 11.12.2014 வியாழக்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பாரதியார் பிறந்தநாள்  விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக காலையில் பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பாரதியாரின் படத்திற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இன்று அகில இந்தியா முழுமையும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்  பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கு காரணம் பாரதியாரின் தன்னலமற்ற பங்களிப்புதான் என்பது குறித்தும் விரிவாக பேசியதோடு அனைவரும் பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்திட முன்வர  வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் பாரதியார் பிறந்தநாள் தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல் மற்றும் ஓவியப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, செல்வி . இலதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
 





















வியாழன், 20 நவம்பர், 2014

வழியனுப்பு விழா........

                     எமது பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிய திரு இரா. முரளி அவர்கள் பணியிட மாறுதல் மூலம் வேறு பள்ளிக்கு சென்றமைக்காக அவருக்கு வழியனுப்பு விழா எமது பள்ளியில் பள்ளித்தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த அவர், பதவி உயர்வின் மூலம் எமது பள்ளிக்கு வந்து மிகக் குறுகிய காலமே பணியாற்றினாலும் தமது கற்பித்தல் திறமையினாலும், நல்ல அனுகுமுறையாலும் அனைவரிடத்தும் நற்பெயர் பெற்றார்.
                            விழாவில் உதவி ஆசிரியர்கள் திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா, செல்வி த. இலதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


கணித உபகரணப் பெட்டியை பயன்படுத்தி கற்கும் எமது பள்ளி மாணவர்கள்.........










உலக கழிவறை நாளில் எமது பள்ளிக் கழிவறையின் அழகிய தோற்றம்...........





திங்கள், 17 நவம்பர், 2014

சாதிச் சான்று வழங்கும் விழா........

 

          ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 17.11.2014 ல் மாணவர்களுக்கான சாதிச் சான்று வழங்கும் விழா நடைபெற்றது.
            தமிழக அரசின் மின் ஆளுகை திட்டத்தின் கீழ் வருவாய்த்துறையைச் சார்ந்த அனைத்து சான்றிதழ்களும் வட்டாட்சியர் அலுவலம் செல்லாமலேயே கணினி மையம் மூலம் பெறலாம். அதன்படி எமது பள்ளியில் தற்போது ஆறாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சாதிச் சான்றிதழ்களை எமது பள்ளியின் இணைய இணைப்பின் மூலம் பள்ளியிலேயே விண்ணப்பித்து  அவை ஏற்பு செய்யப்பட்ட பின்னர் பள்ளியிலேயே பதிவிரக்கமும் செய்து  அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித கட்டணமும் பெறாமல் வழங்கப்பட்டுள்ளது. வெறும் தாளில் அச்சிடப்பட்ட அச்சான்றிதழ்கள் அனைத்தும் அழகிய முறையில் லேமினேசன் செய்யப்பட்டு இன்று பள்ளியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

         இச்சான்றிதழ்கள் வழங்கும் விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் தலைமை தாங்கி அனைவருக்கும் சாதிச் சான்றிதழ்களை,வழங்கினார்.

       விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, செல்வி த. இலதா, திரு வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.