வெள்ளி, 14 நவம்பர், 2014

குழந்தைகள் தினவிழா.....



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (14.11.2014) பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்களின்  125 வது பிறந்த தினம் குழந்தைகள் தின மாகக் கொண்டாடப்பட்டது.

              வழக்கமாக சீருடையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் இன்று பல வண்ண ஆடைகளோடு பள்ளிக்கு வந்தனர். இதுவே அவர்களுக்கு இன்றைய முதல் மகிழ்ச்சியாக அமைந்தது.
அடுத்து 1 முதல் 5 வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு வித்தியாசமான பல போட்டிகள் நடத்தப்பட்டது.
அவை பின் வருமாறு:  
1.   முதல் வகுப்பு          - ஆங்கில வினைச் சொல்லுக்கேற்ற
                         செயல்பாடு செய்தல்.
2.   இரண்டாம் வகுப்பு - கூறும் எண்களுக்கேற்ப சேர்ந்து நிற்றல்.
3.   மூன்றாம் வகுப்பு  - வார்த்தையின் கடைசி எழுத்துக்கேற்ற அடுத்த
 வார்த்தைகள் இணைத்தல்
4.   நான்காம் வகுப்பு  - கவன வீச்சைக் கண்டறிதல்
5.   ஐந்தாம் வகுப்பு    - பொருட்களை வரிசைப்படுத்துதல்

பின்னர் 6முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு கிருஷ்ணா மற்றும் பால்கணேஷ் என இரு குழுக்கள் பங்கேற்ற சிறப்பு  வினா விடைப் போட்டியும், அடுத்து குழந்தைகள் வளர்ச்சியில் தொலைக்காட்சியின் பங்கு -  பயனுள்ளது, பயனில்லாதது என்ற தலைப்பில் தலைமை ஆசிரியரை நடுவராகக் கொண்ட, பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற சிறப்பு பட்டி மன்றம் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் இருதரப்பிலும் வைத்த விவாதம் அனைவரையும் வியக்க வைத்தது சுமார் 80 நிமிடங்கள் இப்பட்டிமன்றம் மட்டுமே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
         பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது. விழாவில் பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி மு.இலட்சுமி, செல்வி. த. லதா, திரு. வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.