வியாழன், 10 ஜூலை, 2014

சுகாதாரப் போட்டிகள்



ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
வலைப்பூ : www.kalvikoyil.blogspot.in மின்னஞ்சல் : pumsjothinager@gmail.com
சுகாதாரப் போட்டிகள்
இன்று  09..07.2014.ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான சுகாதாரப் போட்டிகள் பள்ளி உடல் நலச் சங்கம் சார்பில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.
                முன்னதாக போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் துவக்கி  வைத்தார்.
இதயத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விளம்பர வாசகம் எழுதும் போட்டியும், மதுப்பழக்கமும், புகைபிடித்தலும் சமூகத்தின் சீர் கேடுகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், மதுப் பழகத்தின் விளைவுகள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடைபெற்றது. போட்டிகளில்  6,7,8 வகுப்பு மாணவர்கள் கலந்துக்கொண்டனர். அதில் கீழ்க்கண்டவர்கள் முதல் மூன்று இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

.எண்
போட்டியின் பெயர்
மாணவர் பெயர்
வகுப்பு
1.
வாசகம் எழுதுதல்
1. நா. தினேஷ்
2. . கீர்த்தனா
3. . நவீன்
ஏழாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
2.
கட்டுரை
1. சு. நதியா
2. .. நந்தினி
3. சீ. கீர்த்திகா
எட்டாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
3.
ஓவியம்
1. சி. இராகுல்
2. மு. சுரேந்தர்
3. பூ. தமிழரசன்
எட்டாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திரு இரா. முரளி, திரு தீ. சிவராமன், திரு வே. வஜ்ஜிரவேலு, திருமதி . நர்மதா ஆகியோர் செய்தனர்.











திங்கள், 16 ஜூன், 2014

எமது பள்ளியில் நடைபெற்ற மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - செய்தித் தாட்களில் வந்த செய்திகள்

 11.06.2014 தினமணி செய்தித் தாளில் வெளிவந்த செய்தி
 13.06.2014 தமிழ் முரசு செய்தித் தாளில் வந்த செய்தி
15.06.2014 தினகரன் செய்தித் தாளில் வந்த செய்தி

செவ்வாய், 10 ஜூன், 2014

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி




ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்
வலைப்பூ :www.kalvikoyil.blogspot.in மின்னஞ்சல் : pumsjothinager@gmail.com
**********************
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி

இன்று 09.06.2014 திங்கட்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி  நடத்தப்பட்டது.

தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு ஆணைக்கினங்க ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று சுற்றுச் சூழல் மன்றம் சார்பில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் மழைநீர் சேமி்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்களை பேரணியில் முழங்கி வந்தனர்.

பேரணி பள்ளி அமைந்துள்ள ஜோதிநகர் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியே சென்றது.

பேரணியின் இறுதியில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தற்போதைய சூழலில் தண்ணீர் பற்றாக்குறை என்பது உலகம் முழுமையும் உள்ள நிலையில் நமது நாட்டில் அதை சமாளிக்கும பொருட்டு மழைநீரை சேமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், மழைநீர் சேமிக்கும் பல்வேறு வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

பேரணியில் உதவி ஆசிரியர்கள் திருமதி சு சாரதா, திரு வே. வஜ்ஜிரவேல் திருமதி . நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

வியாழன், 5 ஜூன், 2014

உலக சுற்றுச் சூழல் தின விழா

                    இன்று (05.06.2014) ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தின விழா நடைபெற்றது.
     முன்னதாக சுற்றுச் சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது. அதில் மாணவர்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வந்தனர்.
     பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. அதில் மாணவர்கள் சுற்றுச் சூழல் தொடர்பான தனது படைப்புகளை வெளியிட்டனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
     விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி சு. சாரதா, மு. இலட்சுமி, அ. நர்மதா ஆகியோர் பங்கேற்றனர். 



















செவ்வாய், 3 ஜூன், 2014

விலையில்லா கல்விப் பொருட்கள் வழங்கல்.......

                 எமது பள்ளியில் இன்று (02.06.2014) புதிய கல்வி ஆண்டின் பள்ளி துவங்கும் முதல் நாளிலேயே, தமிழக அரசின் பள்ளிக் குழந்தைகளுக்கான விலையில்லா கல்விப் பொருட்கள் பாட நூல்கள், பாடக் குறிப்பேடுகள், சீருடை, வண்ண மெழுகு பென்சில்கள், கணித கருவிப் பெட்டி ஆகியன வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு     டி. பூபதி கலந்துக்கொண்டார்.