சனி, 1 பிப்ரவரி, 2014

தலைமை ஆசிரியர்கள் கூட்டம்



இன்று 31.01.2014 எமது ஒன்றிய அனைத்து தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது
முன்னதாக தமிழ்த் தாய் வாழ்த்திற்கு பிறகு கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார், கூட்டத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு டி. துரைசாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டார். உடன் மழலையர் பள்ளிகளின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. நாகராஜு, அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி அ. மரியரோஸ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் ஆசிரியர்களின் கற்றல்/ கற்பித்தல் பணி மற்றும் பள்ளிகளின் மேம்பாடு குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது.   
பின்னர் கடந்த 26.01.2014 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் விருது பெற்று வந்துள்ள ஆசிரியர்கள் திருவேங்கடம், செந்தில்குமார் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
கூட்டத்தில் வந்து கலந்துக்கொண்ட ஒன்றிய வளமைய முன்னாள் மேற்பார்வையாளர் திரு சி. சிவராமன் அவர்கள் தம்து பணிக்காலத்தில் நல்ல ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் நன்றி கூறினார். ஜோதிநகர் பள்ளித் தலைமை ஆசிரியரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவருமான திரு செ. இராஜேந்திரன் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இறுதியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. பிரசாத் அனைவருக்கும் நன்றி கூறினார்.















வியாழன், 30 ஜனவரி, 2014

தியாகிகள் தினம்



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (30.01.2014) தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்ட்து.
அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாள், தியாகிகள் தினமாக நாடு முழுமையும் கடைபிடிக்கப்படுகிறது, அதன்படி பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னதாக முற்பகல் சரியாக 11.00 முதல் 11.02 வரையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் அனைவருக்கும் அமைதி (மௌன) அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர்  அனைவராலும் தீண்டாமை உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.









ஞாயிறு, 26 ஜனவரி, 2014

65 வது இந்திய குடியரசு தின விழா




ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.01.2014) 65வது இந்திய குடியரசு தினவிழா நடைபெற்றது.
முன்னதாக காலை சரியாக 10.00 மணிக்கு பள்ளியில் இந்திய தேசியக் கொடியை பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி .பூபதி அவர்கள் ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் ஊத்தங்கரை அரிமா சங்கத் தலைவர் திரு. ஆர். நகுலன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விழாவில் பள்ளி மாணவர்கள் இந்தியக் குடியரசு தின விழா குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாடினர், தேசபக்திப் பாடல்களைப் பாடினர், இந்திய தேசபக்தியை வலியுறுத்தும் பாரத மாதா நடனமும் நடைபெற்றது. பின்னர் விழாவில் அரிமா டி.எஸ். மணி, சர்வேயர் எம்.சின்னராஜ், வழக்கறிஞர் இரா. செல்வகுமார், அரிமா ஜி.இராஜமாணிக்கம், அரிமா. மூர்த்தி, அரிமா எம். நடேசன், கிரசண்ட் கல்வி நிறுவனத் தாளாளர் திரு நூருல்லாசெரீப், அரூர் காவல் ஆய்வாளர் திருமதி பி. இலட்சுமி ஆகியோரின் வாழ்த்துரைக்குப் பின் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதன்பின் பள்ளி மாணவர்களுக்கு அரிமா டி.எஸ். மணி அவர்கள் மாணவ்ர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கினார். அடுத்து   தேசபக்திப் பாடல்கள் பாடும் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, மாறுவேடப் போட்டி   ஆகியவற்றில் வெற்றி பெற்ற  பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திரு. வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் செய்தனர்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி சு சாரதா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.