ஞாயிறு, 26 ஜனவரி, 2014

65 வது இந்திய குடியரசு தின விழா




ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.01.2014) 65வது இந்திய குடியரசு தினவிழா நடைபெற்றது.
முன்னதாக காலை சரியாக 10.00 மணிக்கு பள்ளியில் இந்திய தேசியக் கொடியை பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி .பூபதி அவர்கள் ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் ஊத்தங்கரை அரிமா சங்கத் தலைவர் திரு. ஆர். நகுலன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விழாவில் பள்ளி மாணவர்கள் இந்தியக் குடியரசு தின விழா குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாடினர், தேசபக்திப் பாடல்களைப் பாடினர், இந்திய தேசபக்தியை வலியுறுத்தும் பாரத மாதா நடனமும் நடைபெற்றது. பின்னர் விழாவில் அரிமா டி.எஸ். மணி, சர்வேயர் எம்.சின்னராஜ், வழக்கறிஞர் இரா. செல்வகுமார், அரிமா ஜி.இராஜமாணிக்கம், அரிமா. மூர்த்தி, அரிமா எம். நடேசன், கிரசண்ட் கல்வி நிறுவனத் தாளாளர் திரு நூருல்லாசெரீப், அரூர் காவல் ஆய்வாளர் திருமதி பி. இலட்சுமி ஆகியோரின் வாழ்த்துரைக்குப் பின் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதன்பின் பள்ளி மாணவர்களுக்கு அரிமா டி.எஸ். மணி அவர்கள் மாணவ்ர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கினார். அடுத்து   தேசபக்திப் பாடல்கள் பாடும் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, மாறுவேடப் போட்டி   ஆகியவற்றில் வெற்றி பெற்ற  பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திரு. வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் செய்தனர்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி சு சாரதா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.



































வியாழன், 2 ஜனவரி, 2014

மூன்றாம் பருவம் - விலையில்லாப் பொருட்கள் வழங்கல்

               இன்று (02.01.2014) எமது பள்ளியில் மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாட நூல்கள், பாடக் குறிப்பேடுகள், சீருடைகள் வழங்கப்பட்டது.
        இன்று மூன்றாம் பருவம் துவக்க நாள், இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து தமிழகம் முழுதும் புத்தாண்டில் பள்ளிகள் துவங்கின. அதன் அடிப்படையில் இன்று எமது பள்ளியும் துவங்கியது. பள்ளி துவங்கிய முதல் நாளான இன்று முன்னதாக பெற்று வந்திருந்த மாணவர்களுக்கான மூன்றாம் பருவ விலையில்லா பாட நூல்களும், பாடக் குறிப்பேடுகளும், நான்காம் இணைச் சீருடைகளும் இன்று வழங்கபட்டது. அதைப் பெற்ற மாணவர்கள் பெறு மகிழ்வு எய்தினர்.