புதன், 18 செப்டம்பர், 2013

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக் கண்காட்சி



கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான  புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக் கண்காட்சி கடந்த 26.06.2013 அன்று கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த 201 நடுநிலைப் பள்ளிகள் இக் கண்காட்சியில் கலந்துக்கொண்டன.

     முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு டி.பி. இராஜேஷ் அவர்கள் கலந்துக்கொண்டு கண்காட்சியைத் துவக்கி வைத்தார். அவ்விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு மு. இராமசாமி, அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு பொன்.குமார், மாவட்டத் துவக்கக் கல்வி அலுவலர் திரு டி. துரைசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் திரு . அன்பு, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் திரு இரா. நடராஜன்,  மாவட்ட சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு. மோ. மகேந்திரன் மற்றும் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
     கண்காட்சியில் மாவட்டத்தின் 10 ஒன்றியங்களில் இருந்து வந்திருந்த மாணவர்கள் தமது புத்தாக்க படைப்புகளை ஒன்றிய வாரியாக வைத்திருந்தனர். அவை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. கண்காட்சியில் வைத்திருந்த பெரும்பாலான படைப்புகள் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை தயாரித்து பயன்படுத்தும் படைப்புகளாகவே அமைந்திருந்தது தற்போதைய எதார்த்த சூழலை வெளிப்படுத்தியதோடு அதற்கான தீர்வை சொல்லக் கூடியதாகவும் அமைந்திருந்தது அனைத்து படைப்புகளும் செயல்முறைப் படைப்பாகவே (WORKING MODELS) அமைந்திருந்ததால் அவற்றை சம்மந்தப்பட்ட மாணவர்கள் செயல்விளக்கம் செய்துக்காட்டினர். காலை முதல் மாலை வரையில் நடைபெற்ற இக்கண்காட்சியை அருகில் உள்ள பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் கண்டுகளித்தனர்.
     மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தேர்வுக் குழுவால் சிறந்த படைப்புகளாகத் தேர்வு செய்யப்பட்ட 17 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
















































சனி, 7 செப்டம்பர், 2013

ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்தல்



இன்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிக் கல்வித்துறை சார்பான ஆசிரியர் தின விழாவில் ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சார்ந்த செ.இராஜேந்திரன் (ஜோதிநகர்), மோ.சிதம்பரம் (கோடாலிவலசை), மா. கிருஷ்ணமூர்த்தி (ஊ.ரெட்டிப்பட்டி) மாம்.கி.ஞானசேகரன்(பெருமாள் நாயகன்பட்டி), நா..ஜோதி (கொட்டாரப்பட்டி), வீ.சரஸ்வதி (நாப்பிராம்பட்டி), இரா. தாசூன் (படப்பள்ளி), இரா. ரேணுகா (மல்லிப்பட்டி), ஜெ. மங்களம் (கிட்டம்பட்டி), இர. நிர்மலா (இலக்கம்பட்டிகாலணி) ஆகிய 10 துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விருதுகள் வழங்கி சிறப்பித்தார். விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு மு.இராமசாமி, அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு பொன். குமார், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு டி. துரைசாமி, கிருஷ்ணகிரி மாவட்டக் க்ல்வி அலுவலர் திரு க. அன்பு ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திரு இரா. பிரசாத், திரு கொ.மா. சீனிவாசன் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்களும் பிறதுறை அலுவலர்களும் கலந்துக்கொண்டனர்.









வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஆசிரியர் தின விழா



கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று ஆசிரியர் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜெந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவி ஆசிரியர் திருமதி சு. சாரதா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பின்னர் தலைமை உரையாற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் ஆசிரியர் தினவிழாவின் முக்கியத்துவம் மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் திறன், அவரின் சேவை  ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பேசினார். பின்னர்
பின்னர் பள்ளி மாணவர்கள் தத்தமது கவிதைகள், பாடல்கள், மற்றும் பேச்சு மூலம் ஆசிரியர் தினத்தை நினைவு கூர்ந்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக்கொண்ட ஊத்தங்கரை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கோ.மா. சீனிவாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு சி சிவராமன் ஆகியோர் ஆசிரியர் தினம் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
அடுத்து விழா நிகழ்வில் பங்குபெற்ற மாணவர்களுக்கும், சதுரங்கப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அத்துடன் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி ஆசிரியர் திருமதி அ. நர்மதா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு ப. சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார். 





























செவ்வாய், 3 செப்டம்பர், 2013

சூரிய ஒளி மூலம் பெறும் மின்சாரம் – பயன்பாடு செயல்முறை விளக்கம்.



     எமது பள்ளியில் இன்று சூரிய ஒளி மூலம் எவ்வாறு மின்சாரம் பெறலாம் எனவும், அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் ஓர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
     3 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்யில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது பற்றியும் அவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் மாணவர்களுக்கு நேரடியாக செயல் விளக்கம் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களால் அளிக்கப்பட்டது. அப்போது பள்ளியில் மாணவர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் புத்தாக்கக் கண்காட்சியில்  பார்வைக்கு வைக்கப்பட்ட சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வீட்டு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட   செயல் முறை மாதிரியை   மாணவர்களுக்கு காட்டி நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
     அப்போது மாணவர்களுக்கு தற்போதைய கூடுதல் மின்சார தேவை மற்றும் உற்பத்திக் குறைவு ஆகியன குறித்தும் மின்சார உற்பத்திக்கு ஆகும் கூடுதல் செலவுகள் குறித்தும் விரிவாகக் கூறி குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்ய ஏற்ற முறை சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரமே எனவும் இதுதான் எதிர் காலத்தில் அனைவருக்கும் பயன்படும் எனவும் விளக்கிக் கூறப்பட்டது.
இதன் மூலம் சூரிய ஒளிமூலம் எவ்வாறு மின்சாரத்தை தயாரிக்க முடியும் எனவும், அதை எவ்வாறு சேமித்து இரவு நேரங்களிலும் பயன்படுத்தலாம் எனவும் மாணவர்கள் அறிந்தனர்.