ஞாயிறு, 27 ஜனவரி, 2013

64வது இந்திய குடியரசு தின சிறப்பு விளையாட்டுப் போட்டிகள்


                    ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் 64வது குடியரசு தின சிறப்பு விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 
                    முன்னதாக காலையில் பள்ளியில் மூவர்ண தேசியக்கொடி பள்ளித் தலைமை ஆசிரியரால் ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் விழா துவங்கியது. பின்னர் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பள்ளி மாணவர்கள் குடியரசுதினம் தொடர்பான பாடல்கள், கவிதைகள் ஆகியவற்றைப் பாடினர் பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா.நாகராஜு மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.






















































வெள்ளி, 19 அக்டோபர், 2012

சர்வதேச கைகள் கழுவும் நாள் விழா

எமது பள்ளியில் சர்வதேச கைகள் கழுவும் நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் இருந்து துவங்கி கிராமத்தின் முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. அப்போது ஊர்வலத்தில் மாணவர்கள் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஒலித்துக்கொண்டு சென்றனர்.
பின்னர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் மாணவர்களுக்கு கைகள் மூலம் பரவும் நோய்கள் பற்றியும், சோப்பு போட்டு கைகள் கழுவ வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். பின்னர் கைகளில் உள்ள அழுக்கு மற்றும் பிற கிருமிகள் ஆகியவை அனைவருக்கும் தெரியும் வகையில் சோதனை செய்துக் காட்டி,  சரியாக கைகள் கழுவும் முறைகள் பற்றி விளக்கிக் கூறினார். அடுத்து பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் தத் தமது கைகளை சரியான முறையில் சோப்பு போட்டுக் கழுவிக் காண்பிக்க பிறகு மற்ற மாணவர்களும் சரியான முறையில் கைகளை கழுவி தினமும் இவ்வாறே கைகளை கழுவுவதாக உறுதி ஏற்றனர்.      
 











 




ஞாயிறு, 14 அக்டோபர், 2012

மனவளக் கலை யோகா பயிற்சிகள்

 
 
இன்றைய உலகம் அவசர உலகம் மட்டுமல்ல, ஆபத்தான உலகமும் கூட. ஆம், மனிதனை சோம்பேரி ஆக்கி, இளம் வயதிலேயே அனைத்து நோய்களையும்  வரவழைக்கும் வகையில் மனிதர்களை மாற்றிவிட்டது. அதற்கேற்ப தரமான உணவுப் பொருட்கள் தற்போது இல்லை. அன்றாடப் பணிகள் குறைந்துவிட்டது.

எனவே இளம் வயது குழந்தைகள் தம்மைக் காத்துக்கொள்ள அவற்களுக்கு உடற்பயிற்சியும், யோகாவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு எமது பள்ளியில் மன வளக் கலை யோகா பயிற்சி வகுப்புகள். நடத்தப்பட்டது. பயிற்சியை மனவளக்கலை துணை பேராசிரியர் திருமதி அனுசுயா அவர்கள் மூன்று நாட்கள் நடத்தினார். மாணவர்கள் மிக்க ஆர்வத்தோடு இப் பயிற்சியில் பங்கு பெற்றனர். பயிற்சி வகுப்புகளில் எளிய உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் எளிய யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. மாணவர்கள்  தினமும் தமது வீட்டில் இப்பயிற்சியை மேற்கொள்வதாக உறுதி மேற்கொண்டனர்.