ஞாயிறு, 14 அக்டோபர், 2012

மனவளக் கலை யோகா பயிற்சிகள்

 
 
இன்றைய உலகம் அவசர உலகம் மட்டுமல்ல, ஆபத்தான உலகமும் கூட. ஆம், மனிதனை சோம்பேரி ஆக்கி, இளம் வயதிலேயே அனைத்து நோய்களையும்  வரவழைக்கும் வகையில் மனிதர்களை மாற்றிவிட்டது. அதற்கேற்ப தரமான உணவுப் பொருட்கள் தற்போது இல்லை. அன்றாடப் பணிகள் குறைந்துவிட்டது.

எனவே இளம் வயது குழந்தைகள் தம்மைக் காத்துக்கொள்ள அவற்களுக்கு உடற்பயிற்சியும், யோகாவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு எமது பள்ளியில் மன வளக் கலை யோகா பயிற்சி வகுப்புகள். நடத்தப்பட்டது. பயிற்சியை மனவளக்கலை துணை பேராசிரியர் திருமதி அனுசுயா அவர்கள் மூன்று நாட்கள் நடத்தினார். மாணவர்கள் மிக்க ஆர்வத்தோடு இப் பயிற்சியில் பங்கு பெற்றனர். பயிற்சி வகுப்புகளில் எளிய உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் எளிய யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. மாணவர்கள்  தினமும் தமது வீட்டில் இப்பயிற்சியை மேற்கொள்வதாக உறுதி மேற்கொண்டனர்.























சனி, 13 அக்டோபர், 2012

திறன் வளர் போட்டிகள்

                   ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி மாணவர்களுக்கான திறன் வளர் போட்டிகள் நடத்தப்பட்டது.
                     பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்பு மாணவர்கள் மிக்க ஆர்வத்தோடு  பங்கேற்றனர்.  பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒன்றிய வள மைய ஆசிரியப் பயிற்றுநர் திருமதி இரா. ஆர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
                       இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திடு ப.சரவணன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி  ஆசிரியர்கள் திருமதி  சு. சாரதா, திருமதி மு. இலட்சுமி, திரு வே. வஜ்ரவேல் ஆகியோர் செய்தனர்.























செவ்வாய், 9 அக்டோபர், 2012

JOY OF GIVING WEEK விழா

 
                    இன்று ( 08.10.2012) எமது பள்ளியில் JOY OF GIVING WEEK எனும் மகிழ்வோடு மற்றவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையை வளர்த்திடும் விழா நடைபெற்றது. அதில் எமது பள்ளி மாணவர்கள் பல்வேறு விதமான கைவினைப் பொருட்களை மிகக் குறுகிய காலத்தில் தயாரித்தும், தமக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் பற்றி கட்டுரைகள் எழுதியும் அசத்தினர். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அவற்றை தமது ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர். இது் ஒருவர் மற்றவர்களுக்கு மகிழ்வோடு உதவிடும் மனப்பான்மையை வளர்ப்பதற்கான வாய்ய்ப்பாக அமைந்த விழாவாகும். 
 














வெள்ளி, 5 அக்டோபர், 2012

விலையில்லா பாடநூல்கள், சீருடை வழங்கும் விழா


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இன்று கிராமக் கல்விக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பள்ளி மாணவர்கள் 89 பேருக்கு விலையில்லா இரண்டாம் பருவத்திற்கான பாடநூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.
     முன்னதாக நடைபெற்ற கிராமக் கல்விக் குழுக் கூட்டத்திற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு. டி. பூபதி தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று, பள்ளி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் விலையில்லாப் பொருட்கள் பற்றியும் அதன் தேவை மற்றும் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். எனவே மாணவர்களும் பெற்றோர்களும் இவற்றைப் பெற்று முறையாகப் பயன்படுத்திக்கொண்டு தம்மையும், தாம் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
     பின்னர் குழு உறுப்பினர்களின் கருத்துரைகளுக்குப் பின் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.
     இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு. ப. சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.