இன்று ( 08.10.2012) எமது பள்ளியில் JOY OF GIVING WEEK எனும் மகிழ்வோடு மற்றவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையை வளர்த்திடும் விழா நடைபெற்றது. அதில் எமது பள்ளி மாணவர்கள் பல்வேறு விதமான கைவினைப் பொருட்களை மிகக் குறுகிய காலத்தில் தயாரித்தும், தமக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் பற்றி கட்டுரைகள் எழுதியும் அசத்தினர். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அவற்றை தமது ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர். இது் ஒருவர் மற்றவர்களுக்கு மகிழ்வோடு உதவிடும் மனப்பான்மையை வளர்ப்பதற்கான வாய்ய்ப்பாக அமைந்த விழாவாகும்.
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
செவ்வாய், 9 அக்டோபர், 2012
வெள்ளி, 5 அக்டோபர், 2012
விலையில்லா பாடநூல்கள், சீருடை வழங்கும் விழா
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இன்று கிராமக் கல்விக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பள்ளி மாணவர்கள் 89 பேருக்கு விலையில்லா இரண்டாம் பருவத்திற்கான பாடநூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற கிராமக் கல்விக் குழுக் கூட்டத்திற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு. டி. பூபதி தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று, பள்ளி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் விலையில்லாப் பொருட்கள் பற்றியும் அதன் தேவை மற்றும் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். எனவே மாணவர்களும் பெற்றோர்களும் இவற்றைப் பெற்று முறையாகப் பயன்படுத்திக்கொண்டு தம்மையும், தாம் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
பின்னர் குழு உறுப்பினர்களின் கருத்துரைகளுக்குப் பின் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு. ப. சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012
பாராட்டு விழா
இன்று 26.08.2012 ல் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
சார்பில் மனித நேயக் கருத்தங்கமும், திரு.வி.க. படத்திறப்பும் கவி.செங்குட்டுவன்
(எ) செ. இராஜேந்திரன் ஆகிய எனக்கு பாராட்டு விழாவும் மிகச் சிறப்பாக
நடைபெற்றது.
விழாவிற்கு அரசு ஆண்கள் மேநிலைப் பள்ளித்
தலைமை ஆசிரியர் திரு ப. பொன்னுசாமி
அவர்கள் தலைமை தாங்கினார். திரு செ.
சிவராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். விழா அறிமுக உரையை திரு ஆடிட்டர் இராசேந்திரன் அவர்கள் ஆற்ற
வாழ்த்துரையை திருவாளர்கள் மருத்துவர்
அருண் தேவராசு, ச. ஞானசேகரன், வி.ஜி. இளங்கோ, தணிகை ஜி. கருணாநிதி, ஆகியோர் வழங்கினர். பின்னர் திரு பழ. வெங்கடாசலம் அவர்களின் பாராட்டு
உரைக்கு பிறகு எனக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதன் பின் நான் ஏற்புரை வழங்கினேன்.
பின்னர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் படத்தை அதியமான் மகளிர் கல்லூரி
தமிழ்த் துறைத் தலைவர் செல்வி பிச்சை.
முத்துஇலட்சுமி அவர்கள் திறந்து வைத்து அவரைப் பற்ரி கருத்துரை வழங்கினார்.
அதன் பின்னர் ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திரு க.சிராஜுதீன் அவர்கள் யார் மனிதன்? என்ற தலைப்பில் மனித நேய
கருத்தரங்க கருத்துரை ஆற்றினார்.
இறுதியில் ஜோ.ஈ.வெரா. திருப்பதி நன்றி கூறினார். விழா ஒருங்கமைப்புப் பணியை பழ. பிரபு அவர்கள் திறம்பட செய்தார்.
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012
வாருங்கள்… வாழ்த்துங்கள்……
ஊத்தங்கரையில்
இயங்கி வரும் விடுதலை
வாசகர் வட்டம் என்ற அமைப்பு
மாதம்தோறும் ஓர் நிகழ்வை நடத்தி வருகிறது. அதில் அந்தந்த மாதத்தின் சிறப்பு நாட்கள்
மற்றும் சிறப்பாளர்களின் பிறந்த நாட்களை அடிப்படையாக வைத்து கருத்தரங்குகளும், படத்
திறப்பும், ஊரின் சிறந்த சாதனையாளர்களை அடையாளம் காட்டிடும் வகையில் மாதம் ஒருவரைத்
தேர்வு செய்து அவருக்கு பாராட்டு விழாவும் நடத்துகிறது. அவ்வகையில் இம்மாதம் 19.08.2012 உலக மனிதநேய நாள் ஆதலால், உலக மனித நேயக் கருத்தரங்கமும், 26.08.2012 திரு.வி.க. பிறந்த நாள் ஆகையால், தமிழ்த் தென்றல் திரு.வி.க படத்திறப்பும் கவி.செங்குட்டுவன் ஆகிய எனக்கு பாராட்டு
விழாவும் வரும் 26.08.2012 ஞாயிறு அன்று நடத்த உள்ளனர். எனவே அவ்விழாவில்
அனைவரும் பங்கு பெற்று விழாவினைச் சிறப்பிக்கவும், என்னை வாழ்த்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்.
அழைப்பு இணைத்துள்ளேன்.
புதன், 15 ஆகஸ்ட், 2012
சுதந்திர தின விழா
எமது பள்ளியில் இன்று (15.08.2012) 66 வது
சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளியில் தேசியக் கொடியை
கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு
விழாவில் பள்ளி மாணவர்கள் பேச்சு, கவிதை, பாடல்கள் என பல வடிவங்களில் தமது திறன்களை
வெளிப்படுத்தினர். விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ இராஜேந்திரன் அவர்கள் சுதந்திர
இந்தியாவின் தற்போதைய நிலை மற்றும் சுதந்திரத்திற்கு முந்தைய நிலை வேறுபாடுகளை மிக
விரிவாக எடுத்துக் கூறி விலை மதிப்பில்லா இச் சுதந்திரத்திரத்தை நாம் போற்றி பாதுகாக்க
வேண்டும் எனக் கூறினார். அடுத்து பிற ஆசிரியர்களின் கருத்துரைகளுக்குப் பின் விளையாட்டு மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி உதவி ஆசிரியர்கள்
ப.சரவணன், சு. சாரதா, மு. இலட்சுமி, வே. வஜ்ரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)