ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளியில் இளைஞர் செஞ்சிலுவச் சங்கம் (JUNIOR RED CROSS) துவக்க விழா, தமிழ் இலக்கிய
மன்றத் துவக்க விழா, மாணவர்களுக்கு இலவச பாடக்குறிப்பேடுகள் மற்றும் எழுது பொருட்கள்
வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின்
கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி தலைமை தாங்கினார். பள்ளியின் ப்-எற்றோர்
ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி வி. பத்மா முன்னிலை வகித்தார். முன்னதாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். அப்போது மாணவர்களின் திறன்களை
வெளிக்கொண்டு வரும் பொருட்டு பள்ளியில் பல்வேறு செயல்பாடுகள் புதிதாக துவக்கப்பட உள்ளதாகவும்
அதன் ஒரு பகுதியாகத்தான் இன்றைய விழா எனவும், மாணவர்களுக்கு இளம் வயதிலேயே சேவை மனப்பான்மையையும்,
இயற்கையை நேசிக்கும் உணர்வையும் ஊட்டிடவே இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன எனவும்
கூறினார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில்
கவிதைகளையும், கட்டுரைகளையும் வழங்கினர். விழாவில் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்
திரு கொ.மா. சீனிவாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு சி. சிவராமன், ஆசிரியப்
பயிற்றுநர் திரு பூ. நந்தகுமார், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்டப் பொருளாளர் திரு
மு. பன்னீர்செல்வம், வட்டார இணை கன்வீனர் திரு இரா. சத்தியமூர்த்தி, ஊத்தங்கரை அரசு
ஆண்கள் மேநிலைப் பள்ளி இளைஞர் செஞ்சிலுவைச்
சங்க ஆலோசகரும் மாணவர்களுக்கு இலவச பாடக் குறிப்பேடுகள் வழங்கியவருமான திரு கு. கணேசன்
ஆகியோர் விழாவில் கலந்துக்கொண்டு வாழ்த்துரையும் கருத்துரைகளும் வழங்கினர். பின்னர்
சிறப்பு விருந்தினரும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கன்வீனருமான திரு சி. செங்குட்டுவன்
அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு ப. சரவணன் அனைவருக்கும்
நன்றி கூறினார். விழாவில் அதிகமான அளவில் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர். விழாவிற்கான
ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி சு. சாரதா, திருமதி மு. இலட்சுமி, திருவே.வஜ்ரவேலு
ஆகியோர் செய்திருந்தனர்.