ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
ஓசோன் தினம்
எமது பள்ளியில் தேசியப் பசுமைப் படை மூலம் ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் கிராமத்தின் முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது. அப்போது மாணவர்கள் புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வாசகங்களை முழங்கி வந்தனர்.
பின்னர் பள்ளி வளாகத்தின் உள்ளே மற்றும் பள்ளி வளாகத்தின் வெளியே மரக் கன்றுகள் நடப்பட்டது.
பள்ளிச் சிறார் மருத்துவ முகாம்
எமது பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் சிங்காரப்பேட்டை அரசு ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் திருமதி. உஷாதேவி அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவப் பரிசோதணை மேற்கொண்டனர். அப்போது 1 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் விட்டமின் ஏ மருந்து அளிக்கப்பட்டது. மேலும் சிறு உடல்நலக் குறை கண்ட மாணவர்களுக்கு மாத்திரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது, இரண்டு மாணவர்கள் மேல் சிகிட்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010
இந்திய சுதந்திரத் திருநாள் விழா
இன்று இந்திய சுதந்திர திருநாள் விழா எமது பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவரும், மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராசன் அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி.திருவேங்கடம், துணைத் தலைவர் கே.எம்.எத்திராசு உள்ளிட்ட பொறுப்பாளர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் கலந்துக்கொண்டனர்.
விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)