ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
செவ்வாய், 22 டிசம்பர், 2009
ஞாயிறு, 20 டிசம்பர், 2009
அன்புள்ள திரு. இராஜேந்திர கவி அவர்களுக்கு,
தங்கள் கல்விக்கோவிலின் முக்கிய நிகழ்வுகளை இனிய எளிய தமிழில் நன்றாக கூறியுள்ளீர்கள். உங்கள் கல்விக்கோவிலில் பயிலும் மாணவ \ மாணவிகள் நல்ல முறையில் முன்னேற இறைவனை வேண்டுகின்றேன். தங்களது இந்த நல்ல நோக்கமும் தொண்டும் மேலும் வளர வாழ்த்துகின்றேன்.
அன்புடன்,
இராமச்சந்திரன்.
S.A. Ramchandar
Navi Mumbai.

வெள்ளி, 18 டிசம்பர், 2009
இன்று(18.12.2009 ) ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இணையப் பயிலரங்கம் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது.பள்ளித்தலைமையாசிரியர் திரு பி.பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடந்தது.திரு.கவி.செங்குட்டுவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.உதவித் தலைமையாசிரியர்கள் திருவாளர்கள் எம்.சி.செயபால், ஆர்.தருமலிங்கம், கே.வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பயிலரங்கை புதுவை பாரதிதாசன் மகளிர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர்.மு.இளங்கோவன் அவர்கள் திரம்பட நடத்தினார். மாணவர் மனநிலை அறிந்து அவர்களுக்கேற்ற எளிய தமிழில் நடத்திச் சென்றமை வரவேற்புக்குறியது.
இப்பயிலரங்கில் கணிப்பொறித்துறை சார்ந்த தமிழ் மாணவர்கள் 100 பேர் தமிழ் இணைய அறிமுகம் பெற்றனர். தமிழ்த்தட்டச்சு,கூகுள் நிறுவனப்பயன்பாடு, மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி அறிமுகம் பெற்றனர். மின்னிதழ்கள் உள்ளிட்ட பல செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.
கணிப்பொறி ஆசிரியர் கே.பி.உமாமகேசுவரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

வியாழன், 17 டிசம்பர், 2009
புதன், 18 நவம்பர், 2009
கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா !
இன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் சே. லீலாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் திரு. அ.வி. விஜயகுமார் அவர்கள் கணினி வழிக் கல்வி மையத்தைத் துவக்கி வைத்தார். இதன் மூலம் இப்பள்ளியின் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்கள் கணினி பற்றிய கல்வியையும், கணினி மூலம் குறுந்தகடு வழி கல்வியையும் பெற்று தமது திறனை மென்மேலும் உயர்த்திக் கொள்ள உதவும் என்பது தின்னம்.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக மற்றும் கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கணினி வழிக் கல்வி மைய பொறுப்பாசிரியர் திருமதி சி. தாமரைச் செல்வி செய்தார். இறுதியில் உதவி ஆசிரியர் சி. சிவா நன்றி கூறினார்.
சனி, 14 நவம்பர், 2009
குழந்தைகள் தினவிழா !
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தினவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஊத்தங்கரை ஒன்றிய வள மேற்பார்வையாளர் திரு.அ.வி.விஜயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ இராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.விழாவில் ஒன்றிய வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு, கோவிந்தராஜ், கிராமக் கல்விக் குழுத்தலைவர் திரு இராதா நாகராஜ்,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு திருவேங்கடம்,துணைத் தலைவர் திரு எத்திராஜ்,செயற்குழு உறுப்பினர் துரு முருகன் உள்ளிட்ட பெற்றோர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.மேலும் ஒன்றிய அளவில் நடைபெற்ற கட்டுரை,பேச்சுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளைப் பெற்ற சு.பிரியா,மு.தங்கவேல் ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
பின்னர் பள்ளி வளாகத்தில் மாணவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு சே.லீலாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

வெள்ளி, 13 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)