ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
செவ்வாய், 13 ஜனவரி, 2026
ஜோதிநகர் பள்ளியில் பொங்கல் விழா 2026....
இன்று ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
முன்னதாக பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் புகையில்லா போகி உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் பல வண்ணக் கோலங்கலால் நிறைந்த பள்ளி வளாகத்தில், புதிய பாணைகளில் பொங்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து உலகைக் காக்கும் சூரியக் கடவுளுக்கு பொங்கல் படையல் இட்டு வழிபாடு செய்யப்பட்டது.
பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புப் பொங்கல் உணவாக வழங்கப்பட்டது.
நிகழ்வில் வண்ணத்துப் பூச்சிகளாய் பலவண்ண ஆடைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













































