ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
வியாழன், 11 டிசம்பர், 2025
பாரதியார் பிறந்த நாள் விழா 2025.....
புதன், 3 டிசம்பர், 2025
உலக மாற்றுத் திறனாளிகள் நாள் உறுதிமொழி 2025.....
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று 03.12.2025 உலக மாற்றுத் திறனாளிகள் நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முன்னாதாக பள்ளி காலை இறை வணக்கக் கூட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் உலக மாற்றுத் திறனாளிகள் நாளான இன்று மாற்றுத் திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவர்களை சமூகத்தோடு ஒன்றி வாழச் செய்வதன் அவசியம் குறித்தும் விளக்கினார்.
பின்னர் ஒற்றுமையை வளர்ப்போம் என்ற தலைப்பில் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, ரா. ஜீவா, ச. மரகதம் ஆகியோரும், மாணவர்களும் பங்கேற்றனர்.






























