
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
செவ்வாய், 15 ஜூலை, 2025
கல்வி வளர்ச்சி நாள் விழா.....
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.07.2025) கல்விக்கண் கொடுத்த கர்ம வீரர் காமராசரின் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். பின்னர் உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், மு. அனிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து தலைமை உரையாற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள், கர்ம வீரர் காமராசர் அவர்களைப் பற்றிய பல சிறப்புச் செய்திகளை பகிர்ந்துக்கொண்டார். மாணவர்கள் தமது பேச்சு, பாடல்கள் மூலம் காமராசரின் வாழ்க்கை, செயல்பாடுகள் பற்றி வெளிப்படுத்தினர்.
பின்னர் பேச்சு, கட்டுரை, பாடல், ஓவியம், கதை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியில் உதவி ஆசிரியர் மா. யோகலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
வியாழன், 10 ஏப்ரல், 2025
பள்ளி ஆண்டு விழா - 2024-25
ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2024 -25 கல்வி ஆண்டுக்கான "பள்ளி ஆண்டு விழா" சிறப்பாக நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவில் பள்ளி மாணவர்களின் பேச்சு, பாடல், நடனம் போன்ற கல்வி, கலை, கலாச்சாரம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கல்வித் துறை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் ச. லோகேஷா, மு. சாந்தி, வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் சண்முகம், ஆகிய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தி. வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் விஜயகுமாரி பிரகாஷ், ஆகியோரும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் க. புவனேஷ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இர. மகாலட்சுமி, கலந்துக் மணிகண்டன், சுகுணா, உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோகள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு பள்ளிக் குழந்தைகளின் திறமைகளைப் பாராட்டினர்.
முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், மா. யோகலட்சுமி, மு. அனிதா, மு. அகிலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் உதவி ஆசிரியர் சோ. சிவகுநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)