ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
திங்கள், 14 அக்டோபர், 2024
தேசியத் திறனாய்வுத் தேர்வு - 2024 சிறப்பு வகுப்புகள் துவக்கவிழா...
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று தேசியத் திறனாய்வுத் தேர்வு - சிறப்பு வகுப்புகள் துவக்கவிழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் சோ.ப் சிவகுருநாதன், கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, கணினி பயிற்றுநர் மு. அகிலா ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துரை வழஙகினர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது உரையில் தேசியத் திறனாய்வுத் தேர்வின் முக்கியத்துவம், மற்றும் அதில் பங்கு பெறுவதால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றை மிக விரிவாக விளக்கினார். அரசு பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே ஆண்டுதோறும் நடத்தப்படுவது தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு ஆகும். இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு (9,10,11,12 வகுப்புகளுக்கு) மாதம் ₹1000 வீதம் அரசாங்கத்தால் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)