திங்கள், 16 செப்டம்பர், 2024

தமிழ் ஆளுமை விருது...

ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் கவி. செங்குட்டுவன் எனும் செ. இராஜேந்திரன் அவர்களுக்கு இன்று சென்னையில் நிகழ்வில் *தமிழ் ஆளுமை விருது* வழங்கப்பட்டது. சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கம் சார்பில் இன்று (15.09.2024) அதன் தலைவர் பாவரசு பாரதி சுகுமாரன் தலைமையில் திருக்குறள் மாநாடு நடந்தது. இதில் 133 பேர் எழுதிய திருக்குறள் களஞ்சியம் 3 தொகுதிகள் வெளியீடு, இதை எழுதிய ஆளுமைகளுக்கு திருக்குறள் ஆய்வு நெறிச் செம்மல் விருது வழங்குதல், அர்ப்பணிப்பு உணர்வுடன், தொடர்ந்து தமிழ் பணியாற்றி வருபவர்களுக்கு *தமிழ் ஆளுமை விருது* வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பணியாற்றி வரும் ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன் அவர்களுக்கு *தமிழ் ஆளுமை விருது* செவாலியே வி.ஜி. சந்தோஷம் அவகளால் வழங்கப்பட்டது. எவ்வித விண்ணப்பமோ, பரிந்துரையோ இல்லாமல் வழங்கப்பட்டதே இவ்விருதுக்கான சிறப்பு ஆகும். நிகழ்வில் தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் திரு முகுந்தன், மதுரை காமராசர் பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவர் கோ. சத்தியமூர்த்தி, தமிழ்நாடு காவல்துறை நுன்னறிவு பிரிவுத் துறை தலைவர் திருநாவுக்கரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆய்வாளர் மணவழகன், பேராசிரியர் முனைவர் சுலோச்சனா, தமிழ்நாடு காவல் துறை சிலை தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் சிவக்குமார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர். தூயதமிழ் வேந்தர் வெற்றி வேந்தன் எனும் விஜயராகவன், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் பொன். குமார், புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் திரு முத்து உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.