திங்கள், 18 மார்ச், 2024

ஜோதிநகர் பள்ளியில் மாணவர் சேர்க்கை - விழிப்புணர்வுப் பயணம்.....

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பயணத்தில் முன்னதாக ஜோதிநகரின் முக்கிய சாலைகளில் மாணவர்களோடு இணைந்த மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அப்போது மாணவர்களும் ஆசிரியர்களும் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த கோஷங்களை முழக்கினர். தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் ஜோதிநகர், காமராஜ் நகர், நாச்சக்கவுண்டனூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் பல்வேறுபட்ட சலுகைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான செய்திகளை உள்ளடக்கிய துண்டறிக்கைகளை வழங்கி அனைத்துப் பள்ளி வயதுக் குழந்தைகளையும் ஜோதிநகர் அரசுப் பள்ளியில் சேர்த்திட வலியுறுத்தினர். நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், வெ. சண்முகம், பூ. இராம்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.