இன்று (10.10.2022) 2022-23 கல்வி ஆண்டின் இரண்டாம் பருவத் தொடக்க நாள்.
பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாட நூல்களும், பாடக்குறிப்பேடுகளும் வழங்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையில் இன்று பள்ளிக்கு வந்திருந்த 6 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும், விலையில்லா பாடநூல்களும், பாடக்குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன.
1 முதல் 5 வகுப்புகள் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் எனும் 3 நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், 1 முதல் 5 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை.
மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் வழங்கினார். அப்போது அவர் இரண்டாம் பருவம் இனிய பருவமாக எல்லோருக்கும் அமைய வேண்டும் என வாழ்த்தினார்.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் திருவாளர்கள் ச. மஞ்சுநாதன், வெ. சண்முகம், தற்காலிக ஆசிரியர் ம. யோகலட்சுமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.