ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (30.06.2022) பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாமைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1. தமிழக கல்வித் துறையால் இவ்வாண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள “எண்ணும் எழுத்தும்“ எனும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல்.
2. பள்ளியில் தற்போது ஏற்பட்டுள்ள ஆசிரியர் பற்றாக் குறையை போக்கி, மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டிற்கு உதவிடுமாறு கல்வித் துறையை கேட்டுக்கொள்ளல்.
3. மாணவர்களின் கல்வித் தர மேம்பாட்டையும், பன்முகத் திறன் மேம்பாட்டையும் வளர்த்திடும் பொருட்டு பள்ளியில் பல்வேறு போட்டிகள் மற்றும் மன்றச் செயல்பாடுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருதல்.
இன்றைய கூட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் திரு. ச. மஞ்சுநாதன், திரு. பூ. இராம்குமார் ஆகியோரும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பெ. மகாலட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி நாச்சிஜெயபால் உள்ளிட்ட அனைத்து பெற்றோர்களும் கலந்துக் கொண்டனர்