கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (07.01.2021) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னதாக அனைவருக்கும் கொரோனா கால சிறப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்கும் வகையில் சுகாதார திரவம் மற்றும் முகக் கவசங்கள் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது.
பின்னர் சமூக இடைவெளி கடைபிடித்து அனைவருக்கும் இருக்கைகள் அமைத்துக் கொடுத்து பயிற்சி முகாம் துவக்கப்பட்டது. முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில் தற்போதைய கொரோனா கால பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவின் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக்
கூறினார்.
பின்னர் உதவி ஆசிரியர்கள் திரு சி. ஆனந்தகோபாலகிருஷ்ண மூர்த்தி, திரு பூ. இராம்குமார் ஆகியோர் பயிற்சி முகாமுக்கான கருத்துக்களை வழங்கினர்.
நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி கு. ஆனந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி பெ. மகாலட்சுமி உள்ளிட்ட அனைவரும் கலந்துக் கொண்டனர்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு ஜி.எம். சிவக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.....