இன்று (29.04.2020) காலை 10 மணி முதல் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர்
பள்ளியில் படிக்கும் அனைத்து (53 மாணவர்கள்) மாணவர்களின் இல்லங்களுக்கு
நேரில் சென்று கொரோனா நிவாரணப் பொருட்களை (ரூபாய் 600 மதிப்புள்ள மளிகை
மற்றும் சுகாதார பொருட்கள்) எமது பள்ளி ஆசிரியர்கள் சார்பில்
வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊத்தங்கரை வட்டாட்சியர் திரு. செந்தில்குமரன் அவர்கள் தாமாக
முன்வந்து ஆர்வத்தோடு கலந்துக் கொண்டார்.
நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள்
தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள்
தலைமையில் கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சி மன்றத் தலைவர் தி. வெங்கடேசன்,
பள்ளி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமார், ஜி.எம். சிவக்குமார்,
பூ.இராம்குமார், ஆனந்த கோபாலகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஜோதிநகர் பள்ளிக்கு
வரும் மாணவர்களின் வீடுகள் அமைந்துள்ள ஜோதிநகர், நாச்சகவுண்டனூர், காமராஜ்நகர், கெங்கிநாயகன்பட்டி, படதாசம்பட்டி ஆகிய குக்கிராமங்களுக்குச் சென்று
நேரில் பொருட்களை வழங்கினர். பொருட்களை பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் மிகுந்த
மனநிறைவையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.