இன்று 02.08.2019
வெள்ளிக்கிழமை கெங்கபிராம்பட்டி குறுவளமைய அளவிலான
சதுரங்கப்போட்டிகள் நடைபெற்றது.
முன்னதாக போட்டிகளை மைய ஒருங்கிணைப்பாளரும், ஜோதிநகர் பள்ளித்
தலைமை ஆசிரியருமான திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டிகள்
நடத்துவதன் அவசியம் பற்றியும் மாணவர்களின் திறன் வெளிப்பாட்டிற்கு இப்போட்டிகள் எவ்வாறு
பயன்படுகிறது என்பது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறியும், போட்டிக்கான விதிமுறைகளை
எடுத்துக் கூறியும் போட்டிகளைத் துவக்கிவைத்தார்
பின்னர் பள்ளி மாணவர்கள் 1 முதல் 5 வகுப்புகள் வரையில் ஒரு
பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்புகள் வரையில் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு
அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் தமது திறமைகளை
வெளிப்படுத்தினர்.
நான்கு
சுற்று போட்டிகளுக்குப்பின் கீழ்க்கண்ட மாணவர்கள் முதல் இரண்டு இடங்களுக்கு தேர்வு
செய்யப்பபட்டனர்.
3 முதல் 5 வகுப்புப் பிரிவு :
முதலிடம் : எஸ். குமரன் பி.அனுஸ்ரீ
பேயனூர் நாப்பிராம்பட்டி
இரண்டாமிடம் : ஜெ. சஞ்சய் எஸ். ஆராதனா
ஜோதிநகர் ஜோதிநகர்
6 முதல் 8 வகுப்புப் பிரிவு :
ஆண்கள் பெண்கள்
முதலிடம் : எஸ். சக்தி வி.
ஹரிதர்ஷினி
நாப்பிராம்பட்டி நாப்பிராம்பட்டி
இரண்டாமிடம் : எஸ். விக்னேஷ் எஸ். தாமரைச் செல்வி
கொண்டம்பட்டி கொண்டம்பட்டி
அதன் பின்னர் போடிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கெங்கபிராம்பட்டி
பள்ளித்தலைமை ஆசிரியர் திரு பி. பொன்முடி உள்ளிட்ட கெங்கபிராம்பட்டி மையத்தைச் சார்ந்த
ஜோதிநகர், உப்பாரப்பட்டி, கொண்டம்பட்டி, நாப்பிராம்பட்டி, பேயனூர், ஆகிய பள்ளிகளின் ஆசிரியர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.