ஊத்தங்கரை
ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளியில் இன்று 28.06.2018 மாணவர்களுக்கான முதல் பருவ விலையில்லா
சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது .
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு
செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற
விழாவில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு
மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் மற்றும் பாடக் குறிப்பேடுகள்
வழங்கப்பட்டது.
அப்போது அவர் இவ்வாண்டு தமிழக அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட
வண்ணச் சீருடைகள் பற்றி எடுத்துக் கூறி 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு இளம்பச்சை
நிற மேலாடைகள் மற்றும் கரும்பச்சை நிற கீழாடைகள் வழங்கப்பட்டது. 6 முதல் 8
வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே வண்ண ஆடைகள் வழங்கப்பட்டது.
விழாவில்
பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி
மு.லட்சுமி, த. லதா, ந.
திலகா ஆகியோர் கலந்துக்கொண்டனர்