ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில்
இன்று (13.10.2017) ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 30 அரசு நடுநிலைப்
பள்ளிகளில் இருந்து 60 மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துக்கொண்ட இக்கண்காட்சியில்
87 படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக காலை 10 மணிக்கு ஊத்தங்கரை உதவித் தொடக்கக்
கல்வி அலுவலர்களால் துவக்கப்பட்ட கண்காட்சி பிற்பகல் 4 மணி வரையில் இருந்தது.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்
திரு சரவணன், திரு இராசா, திருமதி முத்தம்மாள், திருமதி சாரதா ஆகியோர் தேர்வாளர்களாக
கலந்துக் கொண்டு சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்தனர்.
பின்னர்
பிற்பகல் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாரம்பட்டி பள்ளிக்கு முதல் பரிசும், மூங்கிலேரி
பள்ளிக்கு இரண்டாம் பரிசும், ஒட்டம்பட்டி பள்ளிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு
விழாவில் ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திரு. மு. விஜயராஜ், திருமதி
கோ. மாதேஸ்வரி, ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திருமதி இரா. வசந்தி, ஜோதிநகர் தலைமை
ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன், ஊ.ரெட்டிப்பட்டி தலைமை ஆசிரியர் திரு. மா. கிருஷ்ணமூர்த்தி,
ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
அறிவியல்
கண்காட்சி நிகழ்வை ஜோதிநகர் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.