செவ்வாய், 26 ஜனவரி, 2016

67 வது இந்திய குடியரசு தின விழா




ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.01.2016) 67வது இந்திய குடியரசு தினவிழா நடைபெற்றது.
முன்னதாக காலை சரியாக 9.00 மணிக்கு பள்ளியில் இந்திய தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி நா. திலகா, திருமதி த. லதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு குறித்தும், இவ்விழா நடத்தப்படுவதன் காரணம் குறித்தும் விரிவாக விளக்கியதோடு நமது நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் அவர்கள் நாட்டுக்குச் செய்த தியாகங்கள் குறித்தும் கூறி அதுபோல மாணவர்களும் சமுதாயத் தொண்டு ஆற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் இந்தியக் குடியரசு தின விழா குறித்து உரையாடினர், மேலும் தேசபக்திப் பாடல்களைப் பாடினர், அடுத்து   தேசபக்திப் பாடல்கள் பாடும் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி   ஆகியவற்றில் வெற்றி பெற்ற  பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவில் பள்ளி கிராமக் கல்விக்குழுத் தலைவர் திரு டி. பூபதி, சத்துணவு அமைப்பாளர் திரு பீமன் உள்ளிட்ட பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.