இன்று (30.04.2015) எமது பள்ளியில் 2014
– 15 கல்வியாண்டு நிறைவு நாள் விழா
கொண்டாடப்பட்டது.
இக்கல்வி ஆண்டின் நிறைவு நாளான இன்று எமது பள்ளியில்
பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான
வழியனுப்பு விழாவும், அனைத்து மாணவர்களுக்கான கோடை கொண்டாட்ட விழாவும், 2014-15 கல்வி
ஆண்டு நிறைவு விழாவும் என முப்பெரும் விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளித்தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் தலமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னதாக ஏழாம் வகுப்பு மாணவர் பூ. தமிழரசன்
அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் மாணவர்கள் பள்ளியில்
வழங்கப்படும் அனைத்து வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும்
அதன் மூலம் தமது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டதோடு,
இப்பள்ளியில் கடந்த ஓராண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல புதிய செயல்பாடுகள் மற்றும்
மாணவர் திறன் வெளிப்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை பட்டியலிட்டார். பின்னர் எட்டாம் வகுப்பு
மாணவர்கள் சீ. கீர்த்திகா, ச. நந்தினி, சு. நதியா, சி. இராகுல், சே. நித்திஷ், த. அன்பரசன்,
பெ. இராகுல், அ. நவீன், ஆகியோரும் ஏழாம் வகுப்பு மாணவி பெ. பிரியாவும் தமது பள்ளியில்
தாம் பெற்ற அனுபவங்களையும், ஆசிரியர்களின் அணுகுமுறைகள் பற்றியும் பேசினர். பின்னர்
பள்ளி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, வே. வஜ்ஜிரவேல், அ. நர்மதா ஆகியோர் மாணவர்களுக்கான
அறிவுரைகளை வழங்கினர்.
பின்னர் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள்
சார்பிலான பரிசுகளும், மற்ற அனைத்து மாணவர்களுக்கு இனிப்புகள், பிஸ்கட்ஸ் மற்றும் குளிர்பாணங்கள்
வழங்கப்பட்டது.
இறுதியில் ஏழாம் வகுப்பு மாணவர் மு. இராகுல்
அனைவருக்கும் நன்றி கூறினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஆசிரியர்கள்
எவரின் உதவியையும் நாடாமல் முழுக்க, முழுக்க மாணவர்களே செய்தனர் என்பதே இவ்விழாவின்
மிகப்பெரும் சிறப்பு ஆகும்.