ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
திங்கள், 30 மார்ச், 2015
வியாழன், 26 மார்ச், 2015
சனி, 21 மார்ச், 2015
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிறந்த நாள் பரிசு
வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் எனது பிறந்த நாளான மார்ச் 15 அன்று எனது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எழுது பொருட்களை பிறந்த நாள் பரிசாக வழங்குவது வழக்கம்.
அதன்படி இவ்வாண்டு மார்ச் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் 16.03.2015 திங்கட்கிழமை எனது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எழுது பொருட்களும், இனிப்பும் வழங்கி மகிழ்ந்தேன்.
திங்கள், 16 மார்ச், 2015
பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்...
எமது பள்ளியில் இன்று (16.03.2015) பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி சி. இராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னதாக பள்ளீயின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி நிலைகள் பற்றியும், மாணவர்களின் திறன் வெளிப்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி, பள்ளி ஆண்டு விழா நடத்துவது தொடர்பான தனது கருத்துக்களையும் எடுத்துரைத்தார். இதற்கு பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை எனவும் வலியுறுத்தினார்.
பின்னர் அனைத்து பெற்றோர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
* பள்ளியின் ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது.
*அதற்கு அனைத்து பெற்றோர்களும் முழுமையாக ஒத்துழைப்பு
நல்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
* ஆண்டு விழாவில் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான அனைத்து கல்வி
அலுவலர்களையும் அழைத்து சிறப்பு செய்தல்.
* விழாவில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஏதாவது ஒரு
நிகழ்விலாவது பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகளை அமைத்தல்.
இன்றைய கூட்டத்தில் பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி பூ. கனகராணி, உள்ளிட்ட பெற்றோர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
திங்கள், 2 மார்ச், 2015
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா.....
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ப்ளோரோசிஸ்
விழிப்புணர்வு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற உயர்நிலை/மேல்நிலை மற்றும் உயர் துவக்கப் பள்ளி மாணவ்ர்களுக்கான பரிசுகள் வ்ழங்கும் விழா ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு பொ. பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற் பொறியாளர் திரு எஸ்.செல்வராஜ் அவர்கள் பரிசும்,
சான்றிதழ்களும் வழங்கினார்.
இவ்விழாவில் ஊத்தங்கரை ஒன்றிய உயர்துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)