செவ்வாய், 13 ஜனவரி, 2015

பள்ளியில் பொங்கல் விழா..........


இன்று ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடாப்பட்டது.
முன்னதாக பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தை தூய்மை செய்து அழகிய கோலமிட்டனர். பின்னர் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா பள்ளியில் மிகவும் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, . இலதா, வே. வஜ்ஜிரவேல், . நர்மதா, சத்துணவு அமைப்பாளர் பீமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.



























வெள்ளி, 2 ஜனவரி, 2015

மூன்றாம் பருவ பாடநூல்கள் வழங்கும் விழா

      ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 02.01.2015 பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாட நூல்கள் மற்றும் இவ்வாண்டுக்கான நான்காம் கட்ட சீருடைகள் வழங்கங்கப்பட்டது.
    
      இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து மீள இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதல் நாளிலேயே அனைத்து பாடநூல்களும் வழங்கப்பட்டமை மாணவர்கள் மனதில் மகிழ்வை உண்டாக்கியது.
     விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, செல்வி த.இலதா, திரு வே வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.