ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
திங்கள், 16 ஜூன், 2014
செவ்வாய், 10 ஜூன், 2014
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம்
**********************
மழைநீர் சேமிப்பு
விழிப்புணர்வுப் பேரணி
இன்று 09.06.2014 திங்கட்கிழமை எமது பள்ளியில் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மழைநீர்
சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.
தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு
ஆணைக்கினங்க ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று
சுற்றுச் சூழல் மன்றம் சார்பில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவர்கள் மழைநீர் சேமி்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்களை பேரணியில்
முழங்கி வந்தனர்.
பேரணி பள்ளி அமைந்துள்ள ஜோதிநகர் கிராமத்தின்
முக்கிய தெருக்கள் வழியே சென்றது.
பேரணியின் இறுதியில் பள்ளித் தலைமை ஆசிரியர்
திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தற்போதைய சூழலில் தண்ணீர் பற்றாக்குறை என்பது உலகம்
முழுமையும் உள்ள நிலையில் நமது நாட்டில் அதை சமாளிக்கும பொருட்டு மழைநீரை சேமிக்க வேண்டியது
காலத்தின் கட்டாயம் என்றும், மழைநீர் சேமிக்கும் பல்வேறு வழிமுறைகள் குறித்தும் விளக்கிப்
பேசினார்.
பேரணியில் உதவி ஆசிரியர்கள் திருமதி சு சாரதா, திரு வே. வஜ்ஜிரவேல் திருமதி அ. நர்மதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
வியாழன், 5 ஜூன், 2014
உலக சுற்றுச் சூழல் தின விழா
இன்று (05.06.2014) ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர்
நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச் சூழல்
தின விழா நடைபெற்றது.
முன்னதாக சுற்றுச் சூழல் விழிப்புணர்வை
வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது. அதில் மாணவர்கள் சுற்றுச்
சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வந்தனர்.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப்
போட்டிகள் நடைபெற்றது. அதில் மாணவர்கள் சுற்றுச் சூழல் தொடர்பான தனது படைப்புகளை
வெளியிட்டனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி சு. சாரதா, மு. இலட்சுமி, அ. நர்மதா ஆகியோர்
பங்கேற்றனர்.
செவ்வாய், 3 ஜூன், 2014
விலையில்லா கல்விப் பொருட்கள் வழங்கல்.......
எமது பள்ளியில் இன்று (02.06.2014) புதிய கல்வி ஆண்டின் பள்ளி துவங்கும் முதல் நாளிலேயே, தமிழக அரசின் பள்ளிக் குழந்தைகளுக்கான விலையில்லா கல்விப் பொருட்கள் பாட நூல்கள், பாடக் குறிப்பேடுகள், சீருடை, வண்ண மெழுகு பென்சில்கள், கணித கருவிப் பெட்டி ஆகியன வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி கலந்துக்கொண்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)