இன்று 19.11.2013 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது
இன்று முன்னால்
இந்திய பிரதமர் மாண்புமிகு இந்திராகாந்தி அவர்களின் பிறந்த நாள் ஆகையால் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக
பள்ளி உதவி ஆசிரியர் திரு ப. சரவணன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் முன்னால் இந்திய பிரதமர் மாண்புமிகு இந்திராகாந்தி அவர்களின் தியாகம்
நாட்டுப்பற்று, இந்திய மக்கள் முன்னேற்றத்தில் அவரின் பங்கு பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி சு. சாரதா, திருமதி அ. நர்மதா ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் நன்றி கூறினார்.