ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விலையில்லாப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.
இன்று (30.09.2013) முதல் பருவத் தேர்வு விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லாப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி இன்று ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள் மற்றும் மூன்றாவது சீருடை ஆகியன வழங்கப்பட்டது.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ இராஜேந்திரன் அவர்கள் தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா கல்விப் பொருட்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றும் கூறி இப் பொருட்களைப் பயன்படுத்தி தமது கல்வியை தொடந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறி அனைவருக்கும் விலையிலா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடைகள் ஆகியவற்றை வழங்கினார். உடன் உதை ஆசிரியர்கள் திரு. ப. சரவணன், திருமதி சு. சாரதா. திரு. வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் இருந்தனர்.